9589 கருநாவு.

ஆழியாள் (இயற்பெயர்: மதுபாஷினி ரகுபதி). சென்னை 600106: மாற்று, எண் 101, எச். பிளாக், முத்துமாரியம்மன் கோவில் தெரு, எம்.எம்.டி.ஏ. காலனி, அரும்பாக்கம், 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (சென்னை 600106: அண்ணாமலை அச்சகம்).

80 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 18×10 சமீ., ISBN: 978-81-924400-3-3.

ஈழத்தின் திருக்கோணமலையில் பிறந்து, தற்போது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் ஆழியாள் ஆங்கில இலக்கியத்தில் முதுமாணிப்பட்டம் பெற்றவர். நவீன தமிழ் இலக்கியம் சார்ந்து தீவிர வாசிப்பும் தேடலும் மிக்கவர். ‘உரத்துப் பேச’ என்ற இவரது கவிதைத்தொகுதி 2000ம் ஆண்டில் வெளியாகியது. ஐந்தாண்டு இடைவெளியில் இரண்டாவது தொகுப்பாக ‘துவிதம்’ வெளிவந்திருந்தது.  பின்னர் 6 ஆண்டு இடைவெளியில் வெளிவரும் இவரது மூன்றாவது கவிதைத் தொகுதியே ‘கருநாவு’. புலம்பெயர்ந்த வாழ்புலத்தின் பின்னணியில் உருவான படைப்புக்களே இத்தொகுப்பிலும் இடம்பெறுகின்றன. வாழ்வியல் இருப்பு, பெண்ணின் இருப்பு சார்ந்த அம்சங்கள் கவிதைகளைக் கட்டமைப்பதில் முக்கியம்பெறுகின்றன. கவிதைகள், தீர்க்கமான வார்த்தைகளால் இறுக்கத்துடன் முகத்தில் அறைவதுபோன்ற வீரியத்துடன் வெளிவந்துள்ளன.

ஏனைய பதிவுகள்

Infinite Blackjack Advancement

Articles Da vinci diamonds dual play uk – Finest Blackjack Casinos on the internet Within the 2024 Step Half dozen: Successful A game Away from