பெரிய நீலாவணை ம.புவிலக்சி. கொழும்பு 13: டிசைன் லாப், 190 ஜோர்ஜ் ஆர் டி சில்வா மாவத்தை, கொட்டாஞ்சேனை, 1வது பதிப்பு, மார்ச் 2011. (கொழும்பு 13: டிசைன் லாப், 190 ஜோர்ஜ் ஆர் டி சில்வா மாவத்தை).
xiii, 58 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-0634-00-2.
‘உள்ளக்கிடக்கைகள்’ என்ற முதலாவது கவிதைத் தொகுதியை 2009இல் வழங்கிய பெரிய நீலாவணையைச் சேர்ந்த ம.புவிலக்சியின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு இது. நினைவலைகள், மீனவன், நட்பு, இதயச் சிறைக்குள், கவலை, நிகரில்லாதவள், இதய வாழ்த்து, போன்ற பல தலைப்புகளில் எழுதப்பட்ட 55 கவிதைகள் இந்நூலில் தொகுக்கப்பெற்றுள்ளன. கவிதையும் இந்தத் தொகுப்பும் என்ற தலைப்பில் கவிஞர் திமிலைத்துமிலன் கருத்துரை வழங்கியுள்ளார்.