9591  கல்லறை நெருஞ்சிகள்: கவிதைத் தொகுப்பு.

மைத்ரேயி சபாரட்ணம் பிரேம்ராஜ். ஊர்காவற்றுறை: காவலூர் இலக்கிய வட்டம், நாரந்தனை, 1வது பதிப்பு,2004. (யாழ்ப்பாணம்: ராம் பிறின்ரேர்ஸ் கிரப்பிக்ஸ், பலாலி வீதி).

ix, 32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×13.5 சமீ., ISBN: 955-8853-00-3.

ஊர்காவற்றுறை கரம்பொன் கிராமத்தில் 1960இல் பிறந்தவர் மைத்ரேயி. பெற்றோர் சபாரட்ணம்-தர்மதேவி தம்பதியினர். சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் உயர்கல்வி கற்ற இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பட்டப்படிப்பை மேற்கொண்டார். 1980-83களில் இவர் பல கவிதைகள் எழுதி அலை, புதுசு சஞ்சிகைகளின் மூலம் அவற்றை இலக்கிய அரங்கேற்றினார். முகம் மறுக்கப்பட்டவர்கள், ஊரிலிருந்து ஒரு கடிதம், பிரகடனம், கல்லறை நெருஞ்சிகள், காத்திருத்தல், பெண் இனமே, உயிர்ப்பு, நாமும் மனிதராய் ஆகிய கவிதைகளுடன் சில மொழிபெயர்ப்புக் கவிதைகளையும் இவர் இத்தொகுதியில் சேர்த்துள்ளார்.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 204049).                                                                                                                                                                                                            

ஏனைய பதிவுகள்

17307 ஈழத்துக் கிராமியப் பாடல்கள்.

எம்.கே.முருகானந்தன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 40 பக்கம், விலை: ரூபா 200., அளவு: