9595 களத்தீ: கவிதைத் தொகுதி 1.

வேலணையூர் சுரேஷ். யாழ்ப்பாணம்: சரண்யா பதிப்பகம், 1வது பதிப்பு, கார்த்திகை 1992. (யாழ்ப்பாணம்: முல்லை அச்சகம்).

40 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 20×14 சமீ.

போராட்ட மண்ணில் வாழும் இளங் கவிஞன் ஒருவனின் மனதிலே எழக்கூடிய நியாயமான உணர்வுகள் இத்தொகுதியில் இடம்பெறும் கவிதைகள் மூலம் புலப்படுத்தப்படுகின்றன. ஈழ மண்ணையும் அம்மண்ணுக்காகப் போராடுபவர்களையும் உணர்வுதெறிக்கப் பாடும் இக்கவிஞன்  ‘நான் பேசும் மொழியன்றோ/நற்றமிழ் என் விழியன்றோ/ஏற்றம்கொண்டு உலகினிலே/போற்றி வந்த மொழியன்றோ/இன்று…/ சீர்கெட்ட படையாலே/சீரழிந்து போவதனைப்/பார்த்திருக்க முடியவில்லை/ ஆதலால்…/நான் எழுதப் போகின்றேன்’ என்று தொடக்கக் கவி பாடுவது பொருத்தமாக அமைகின்றது. யமனுக்குச் சவால் விடவும், பூ உதிர்வுக்கு நியாயம் கற்பிக்கவும் முனைகின்ற கவிஞன் நிகழ்கால நடைமுறைகளை நன்கு உள்வாங்கிக் கவிதை படைக்கின்றார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  90209). 

ஏனைய பதிவுகள்

14588 என்னமோ இருக்கிறம்.

கந்தையா பத்மானந்தன். காரைநகர்: அம்மாத்தை வெளியீட்டகம், வாரி வளவு, 1வது பதிப்பு, 2019. (தெகிவளை: அனுபவ பதிப்பகம், Creaze Digital 14, அத்தபத்து டெரஸ்). vi, 71 பக்கம், விலை: ரூபா 250., அளவு:

11350 மாணவர் மனதிற்கு.

ரா.ப.அரூஸ். கிண்ணியா 03: கே.ஐ. ஊடகக் குழு, மஹ்ரூப் நகர், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2011. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 110 பக்கம், விலை: ரூபா 200., அளவு: