சித்தாந்தன். யாழ்ப்பாணம்: குலன் வெளியீட்டகம், கோண்டாவில் வடக்கு, கோண்டாவில், 1வது பதிப்பு, மே 2000. (வவுனியா: வவுனியா வடக்கு ப.நோ.கூ.சங்கப் பதிப்பகம், புதுக்குடியிருப்பு).
xi, 48 பக்கம், விலை: ரூபா 65., அளவு: 21×13 சமீ.
சித்தாந்தன் புதிய கவிஞர். புதிய உணர்வுமுறையுடையவர். மாறுதலான கவிதை குறித்துச் சிந்திப்பவர். அமைதியும் அந்த அமைதிக்குள் உள்ளியக்கமும் கொண்டவர். மொழியை சித்தாந்தன் பயன்படுத்தும் முறைமையினூடாக இவரின் கவிதைகள்புதிய வெளிப்பாட்டையும் புதிதான உணர்வுமுறையினையும் இனங்காட்டுகின்றன. சித்தாந்தன் கவிதைகளிலுள்ள சொற்களின் அமைவுகள் புதிய படிமங்களை மனதில் நிகழ்த்துகின்றன. புதிய காட்சிகளை விரிக்கின்றன. புதிய உணர்வினைக் கிளர்த்துகின்றன. இத்தகைய புதிய கவிதைமுறைமை 90களின் பின்னான ஈழத்துக்கவிதைகளில் அதிகமாகத் தொனிக்கத் தொடங்கியுள்ளன.கருணாகரன் (முன்னுரையில்). இந்நூலில் சித்தானந்தனின் அலைகளின் மொழி, முகமற்ற ஒருவனின் நட்பு, இருளின் சபிப்பு, எல்லோருடைய நாட்களுக்குமான பாடல், மீள மீளத்துளிர்த்தல், உயிர்ப் பெருவலி, தீ நிழல் பொழுது, தீ எரித்த தெரு, மரண கணங்கள், குமுறல்களும் புஷ்பிக்கும் நினைவுகளும், சிறையிடுதல், தொலைந்த முகவரி, முள், வார்த்தைகள் செத்த கணத்தில், காலத்தின் புன்னகை, இனிய காதலின் சிதைவு, குழம்பிப்போன மனத்தின் இரவு, மனிதர்களற்ற கிராமத்தின் கதை, வழியில் தவறிய காதல், இருள் நகரத்து வெளி, அழிவு எழுதும் கோடு, துருவ நட்பு, சிதைந்து போன இரவு, ஊழிப் பிரவாகம், உள்முகத்தீ, விஷ விழி மனிதன், நிழல் அழிந்த மரம், சக்கரம், நித்தியப்படுத்தல், காணாமல் போனவனின் குரல், சமாதானக் கனவு, அவசியமான இடைவெளி. உணர்த்தல், துளிர்க்கின்ற சுவடுகள், பிணந்தின்னி, குமுழிக் கனவுகள், என் தெருப் பைத்தியக்காரன், பேய்களின் வீடு, மௌனப் பிரளயம், நட்சத்திர ஞாபகங்கள், கொதிப்பு, அறுவடை நாள், காலத்தின் முறிவு, கறையான்களின் வலை, எதிலும் நானில்லை, இருட்காலம், துஷ்டர்கள் சூழ்ந்த பொழுது, ஆதியிலிருந்து என் வருகை ஆகிய கவிதைகள் இடம்பெற்றுள்ளன.