9598 காலப் பிரசவம்: கவிதைத் தொகுதி.

தென் புலோலியூர் பரா. ரதீஸ். யாழ்ப்பாணம்: அகில இலங்கை இளங்கோ கழகம், தென் புலோலி, 1வது பதிப்பு, தை 2011. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம், 61B, முதலாம் குறுக்குத் தெரு).

72 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 19.5×12.5 சமீ.

தென்புலோலியின் பிரபல நாடகக்கலைஞர் க.ப.பரராஜசிங்கத்தின் மகனான ரதீஸ், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைச் சிறப்புக் கலைப்பட்டதாரி. மரபுசார் நாடகப் படைப்பாற்றலில் வல்லவரான இவர் ‘அவன் ஒரு மெழுகுவர்த்தி’ என்ற கவிதைத் தொகுப்பின்வழியாக அறிமுகமானவர். இரண்டாவது கவிதைத் தொகுதியாக இந்நூல் அமைகின்றது. கவிதைகளுக்கு அடிப்படையான மனித நேயம் அவரது கவிதைகளின் அடிநாதமாக விளங்குகின்றன. சிறுமை கண்டு பொங்கும் குணமும், இயற்கை ரசனையும் கூடவே காணப்படுகின்றன. கவிதைகளின் பாடுபொருளும் அதன் உருவ நேர்த்தியும் கச்சிதமாக அமைந்துள்ளன.சொன்ன செய்திகளை விட சொல்லாத செய்திகளை ஊகிக்கச் செய்வதில் இவரது கவிதைகள் வெற்றிகொள்கின்றன. மொத்தம் 29 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. மல்லிகையே, காலப்பிரசவம், அக்காளை, தங்கச்சி, பேசவை, ஏன் படித்தோம் நாம் தமிழை, ஊழ்வினை வந்து சேர்ந்திற்று, கிராமத்துப் பெண், என் காதல் தேசமே, விதியே சொல்லு, மூல வேர்கள், சிறுமலர், சாகாவரம், மாண்டார் விருது, பரிசு, பெறுதல், சாதித்தீ, விஞ்ஞானம் வந்திற்று, கொள்ளி, நியாயமா? விட்டுவிடு, சொல்ஏர் உழவா, நோக்கமென்ன, வியாபாரம், மௌனத்தின் ஓசை, ஊமையாய், திரும்பிப்பார், சொல்லிவிடு, நரிகள் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Better 3d Slots On the web 2024

Posts How to start To try out Totally free Harbors From the Gambling establishment Org Slots: Play the Better Harbors Inside the three-dimensional 2024 Enjoy