9600 காற்றோடு பேசுதல்: புதுக் கவிதைத் தொகுதி.

நவீனன் (இயற்பெயர்: வி.ஐங்கரன்). ரஷ்யா: வைகறை வெளியீட்டகம், தபால் பெட்டி எண் 45, Smolensk, 214019, 1வது பதிப்பு, மாசி 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை).

68 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.

சார்ள்ஸ் என்ற புனைபெயரில் தன் பள்ளிக்காலம் முதல் கவிதைத்தளத்தில் பயணித்துவரும் ஐங்கரன், நவீனன் என்ற புனைபெயரிலும் கவிதைகள் எழுதிவருபவர். சென் ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான இவர் அங்கு கல்விகற்ற வேளையில் தொடங்கி அணையாத அறிவாலயம், விடியலின் கானம், இன்னமும் இருட்டினிலே, உறக்கம் தேடும் உலகிற்காய் போன்ற கவிதைத் தொகுதிகளை வழங்கியவர். தற்போது அவுஸ்திரேலியாவில் சிட்னி நகரில் மருத்துவத்துறையில் பணியாற்றுகின்றார். புதுக் கவிதைத் துறையில் தீவிர ஈடுபாடுகொண்ட நவீனனின் கவிதைகளின் மற்றுமொரு தொகுப்பாக இது வெளிவந்துள்ளது. இவர் ரஷ்யாவில் உயர்கல்வியின் நிமித்தம் தங்கியிருந்த வேளையில் இத்தொகுதி வெளிவந்துள்ளது. தீச்சுவாலை வரிகள், உயிர்ப்பு, துளிரும் புதிய முகிழ்கள், உம் சுவாச மூச்சு எம் சுதந்திர வீச்சு, துயரங்கள் தீரும் நாளும் விரையும், மௌன வாக்குமூலம், ஒரு முழு இரவில் முடிவுற்ற அடக்குமுறை, நன்றியுள்ள ஜீவன்கள், உயிர்வாழ்வின் பேனாக்கள், விலங்கினை உடைத்தெழும் மன உறுதி, கவிதைக்கு ஏது எல்லை, காற்றோடு பேசுதல், கருகிய கருமேனி பிளவுண்ட இதயம், வரலாறு உனை விடுதலை செய்யும், புதிதாய் எழுதப்படும் புறநானூறு, புதுமையான விடியல், இலையுதிர்க்கால உதயம், உதைக்கும் காலுக்கு முத்தம், 1948 நவம்பர் 15, உண்மைகள் உயிர்க்கும் நாள் விரையும், அவளில்லாத இன்றைய இன்றுடன், நம்பிக்கை ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 22 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Twin Spin sms pay casino Position

Blogs Get 100percent Around five hundred + 100 100 percent free Spins Appfinity Appfishing “biggest Angling Sense” To own Iphone Android Ipod Smart The new Wins