9613 துடிக்கும் விழிகள்: கவிதைத் தொகுப்பு.

வை.கஜேந்திரன். மன்னார்: வசந்தி-வைரமுத்து, 10/38, 1ம் ஒழுங்கை, எழில் நகர், 1வது பதிப்பு, பங்குனி 2014. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டர்ஸ் பிரைவேற் லிமிட்டெட், 681, காங்கேசன்துறை வீதி).

xxii, 78 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-41112-0-2.

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகக் கொண்ட வை.கஜேந்திரன், பின்னாளில் புலம்பெயர்ந்து மன்னாரில் எமில் நகரில் வசிப்பவர். ‘தின மகுடி’ என்ற சிறுசஞ்சிகையின் ஆசிரியராக இருந்தவர். ‘விழிகள்’ என்ற கவிதைத் தொகுப்புடன் ஈழத்து கவிதை உலகுக்கு அறிமுகமானவர். இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு. இந்நூலில் இடம்பெற்றுள்ள இவரது 42 கவிதைகளும் ஓர் சராசரி இளைஞனின் உணர்ச்சிகளின் வெளிப்பாடாக அமைகின்றன. பல கவிதைகளில் நாட்டின் தற்போதைய நிலைப்பாடும், அது இளைய சமுதாயத்திற்கு ஏற்படுத்தும் பாதிப்பும் அதனால் ஏற்பட்ட விளைவுகளும் பேசப்படுகின்றன. தமிழுணர்வு, கல்வி, தம்பி, இளைஞனே, ஆறு, நானும் கவிஞன், கல்லூரி கனவுகள், புதியவன், பிறந்தான், அவள், விழியில், காதல் தோழி, நினைத்து, உன்னைத்தவிர, காதல் அம்பு, தினம் என இவரது கவிதைத் தலைப்புகள் சிக்கனமாக அமைந்துள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 236907).

ஏனைய பதிவுகள்

Book Of Ra Online

Content Unsere Meinung Zum Book Of Ra Deluxe Slot: Casino -Slot machu picchu gold Freispiele Und Bonusfunktion Im Book Of Ra Online Casino Book Of