9614 துயரம் சுமக்கும் தோழர்களாய்: கவிதைத் தொகுப்பு.

குறிஞ்சிவாணன். திருக்கோவில்: வி.பி.எம்.வெளியீட்டகம், பிரதான வீதி, சாகாமம், 1வது பதிப்பு, ஜுன் 2011. (அக்கரைப்பற்று: மல்ட்டி ஓப்செட் அச்சகம்).

88 பக்கம், விலை: ரூபா 125., அளவு: 18×12.5 சமீ.

தென்கிழக்கிலிருந்து  வெளிவந்துள்ள இந்நூலை எழுதியவரும் மலையகத்தின் பதுளை மாவட்டத்தில், தெமோதரையிலுள்ள நெதர்வில் தோட்டத்தில் பிறந்தவருமான குறிஞ்சிவாணன் ஊவா மாகாணத்தின் மூத்த கவிஞராவார். தெமோதரை மணியம் என்றும் அறியப்பெற்றவர்.  1963 முதல் எழுதிவரும் இவர், அக்கரைப்பற்று-சாகாமத்தில் வாழ்ந்து வருகிறார். இந்நூலிலுள்ள இவரது மரபுக் கவிதைகளின் பாடுபொருளாகப் பெருந்தோட்ட மக்களின் துயரமே அமைகின்றது. மலையக மக்களின் வறுமை, சம்பளப்பற்றாக்குறை,  வீடற்ற நிலை, போஷாக்கின்மை, சமூக அமைப்புகளின் உதாசீனம், தோட்ட அதிகாரிகளின் அடாவடித்தனம், அரசியல் சுரண்டல்கள் என இவரது கவிதைகளின் பாடுபொருள் பலவாக விரிகின்றன. மொத்தம் 51 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன.

ஏனைய பதிவுகள்