9615 தூது போ தென்றலே.

மு.சிங்கராயர். யாழ்ப்பாணம்: தமிழ் மதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2000. (யாழ்ப்பாணம்: புனித வளனார் கத்தோலிக்க அச்சகம்).

(6), 46 பக்கம், தகடு, விலை: ரூபா 65., அளவு: 22×14.5 சமீ.

மரபுவழிக் கவிதைகள் படைப்பதில் ஆர்வம் மிக்கவரான பாஷையூர் சிங்கராயரின் கவித்துவப் புலமையை இத்தூது இலக்கியம் பதிவுசெய்கின்றது. அழகான, இனிமையான, தெரிவுசெய்த  சொற்களை அடுக்கிக் குதூகலத்துடன் குழந்தை யேசுவுக்குத் தூது விடும் கலைஞராக இங்கே தன்னை இனம்காட்டுகின்றார். ஈழத்துக் கிறிஸ்தவ தமிழிலக்கியத்திற்கு புதியதொரு வருகையாக இந்நூல் அமைகின்றது. 1938இல் பிறந்த சிங்கராயர், 20 வயதிலேயே இலக்கியத்துறையில் தடம் பதித்தவர். ‘பாசையூரானைப் பாடு’ என்ற கவிதைத் தொகுதியை 1992இல் வழங்கிய இவரது மற்றுமொரு நூல் இதுவாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 203979).                   

ஏனைய பதிவுகள்