9616 நகரவீதிகளில் நதிப்பிரவாகம்: கவிதைகள்.

ஷெல்லிதாசன். யாழ்ப்பாணம்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், நல்லூர்).

xvi, 100 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4676-13-8.

திருக்கோணமலைக் கவிஞர் ஷெல்லிதாசனின் 69 கவிதைகளின் தேர்ந்த தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. 31வது ஜீவநதி வெளியீடாக இந்நூல் மலர்ந்துள்ளது. பந்தலுக்குள் பனிமழை, கண்ணில் ஒரு கங்கையாறு, நோட்டுக்களின் நோட்டம், கேளுங்கள் தரப்படும், மண் புதைத்த மனிதங்கள், குருதிப் புனல், அடிமையின் மோகம், பரம்பரையை ஏப்பமிடும் பாரம்பரியம், பொம்மலாட்டம், காவலாளியின் கலக்கம், விழித்துக்கொள், நாடிப் பிடித்த நைலோன் வலைகள், அர்த்தசாமத்து முனிகள், நீதிக்குச் சவால்விடும் நிர்வாணங்கள் என இன்னோரன்ன தலைப்புகளில் எமது மண்ணில் புரையோடிப்போயுள்ள சமூக அவலங்களை தன் கவிதைகளின் மூலம் எடுத்துக்காட்டுகின்றார். இடதுசாரிச் சிந்தனைகள் கொண்ட இவரது கவிதைகளில் பெண்களின் நிலைப்பாடு, உலகைத் திரும்பிப் பார்க்க வைக்கும் கொடிய நிகழ்வுகள், மனித குலத்தின் நவீன கண்டுபிடிப்புகள் என்பனவெல்லாம் பதிவாக்கம் பெற்றுள்ளன. இலாவகமான மொழி நடை, கருத்துக்களை பொருத்தமாகக் கவிதை மொழியில் சொல்ல வந்ததை அழுத்தமாகப் பதிவுசெய்வது என்பன போன்ற அம்சங்களால் கவிதைகள் இந்நூலில் பொலிவுற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 236157).

ஏனைய பதிவுகள்

Samtliga Casinon

Content Populära Svenska språke Casinon 2023 Licenser Sam Regleringar Hos Nätcasino Inte me Konto Det krävs inte märkli förkunskaper inte me det befinner sig bara

Gokkasten Offlin Echt Poen Gokkasten Casino’s 2024

Grootte Gokkast features: Natuurlijk plus Bonus symbolen Veelgestelde Vragen Betreffende Noppes Gokkasten Schenkkan ego echt bankbiljet overwinnen met offlin klassieker gokspelen? Gokkasten fruitautomaten erbij aankoop