9635 மரணம் வாழ்வின் முடிவல்ல: அகிலன் கவிதைகள்.

சார்ள்ஸ் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: வசந்தம் பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு, மே 1990. (யாழ்ப்பாணம்: புதிய சித்திரா பதிப்பகம், 664, ஆஸ்பத்திரி வீதி).

40 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17×10.5 சமீ.

5.5.1970 அன்று பிறந்த அகிலன் திருச்செல்வம் 10.5.1989 அன்று இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக் காலத்தில் கொலைசெய்யப்பட்டார். அவரது மரணத்தின் முதலாம் ஆண்டு நினைவாக அவரது நண்பர்களால் தொகுக்கப்பெற்ற அகிலனின் கவிதைகளைக் கொண்டதாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. என் வித்தியாசமானவளுக்கு, எங்கள் மரணம், நீ, நாளையாவது நிரந்தரமாகட்டும், மீண்டும் நான் உயிர்ப்பேன், இனி அரும்பமுடியாத ஒரு பூமரம், மரணம் வாழ்வின் முடிவல்ல, எனது தனிமையை நீக்குவாயா, நினைவும் கனவும் இல்லாத ஒரு நிலையில், என்காதலியே ஆகிய தலைப்புகளில் இக்கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 81765).     

ஏனைய பதிவுகள்