9676 கருவறைக்கு வெளியே.

கவிதா. சென்னை 600078: டிஸ்கவரி புக் பலஸ், பாண்டிச்சேரி விருந்தினர் இல்லத்திற்கு அருகாமையில், கே.கே.நகர், 1வது பதிப்பு, மே 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை).

96 பக்கம், ஓவியங்கள், விலை: இந்திய ரூபா 60., அளவு: 21×14 சமீ., ISBN: 978-81-925627-1-1.

நோர்வேயில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்துப் படைப்பாளி கவிதாவின் சிறுகதைகளின் தொகுப்பு இது. இருளுக்குப் புகுமுன் என்னும் தலைப்பில் குழந்தைப் போராளிகள் பற்றியும் அவர்களின் சமூகப் போராட்டங்கள், உணர்வுகள் பற்றியதுமான ஆழமான முன்னுரையுடன் தனது சிறுகதைகளை இந்நூலில் பதிவுசெய்கின்றார். நாங்களும் துவக்கு வைச்சிருக்கவேணும் அம்மா, உஷ்- இதெல்லாம் வெளியே சொல்லக்கூடாது, நெருப்பின் நிறம் கறுப்பு, உங்கள் பெயர் என்ன?, தனிமை என்னும் பெருவெளி, மண்புழு, கரடி பொம்மை, சுருக்குப் பாவாடைக்காரி, துன்பம் நேர்கையில், பயணம், கதறலின் வாடை, பாண்டிபஜார் குட்டிராஜா, வீடு-மரம்-மனிதம் ஆகிய 13 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

17513 இரை தேடும் பறவைகள்.

மந்தாகினி குமரேஷ். சென்னை 600093: வேரல் புக்ஸ் வெளியீடு, 6, 2ஆவது தளம், காவேரி தெரு, சாலிகிராமம், முதற் பதிப்பு, ஜனவரி 2024. (சென்னை 600093: வேரல் புக்ஸ்). 95 பக்கம், விலை: கனேடியன்

11338 ஆசிரிய வாண்மைத் தேர்ச்சி.

பாலசுப்பிரமணியம் தனபாலன். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14 டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2011. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டேர்ஸ், 424, காங்கேசன்துறை வீதி). viii, 170 பக்கம், விலை: ரூபா