9695 நாவேந்தன் கதைகள்.

நாவேந்தன் (மூலம்), அசலகேசரி (பதிப்பாசிரியர்).  சென்னை 600109: யுனிக் மீடியா இன்டகிரேட்டர்ஸ், இல.8, ஆறாவது சந்து, 8ஆவது பிரதான சாலை, வைஷ்ணவி நகர், திருமுல்லைவாயில், 1வது பதிப்பு, மார்ச் 2014. (சென்னை 77: மணி ஓப்செட்).

154 பக்கம், விலை: இந்திய ரூபா 140., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-83051-24-3.

நாவேந்தன் இலங்கையில் பழந்தமிழ் இலக்கியத்தை அழகு தமிழில் எளிமையாகப் பேசும் தமிழரசுக் கட்சியின் மேடைப் பேச்சாளராகப் புகழ்பெற்றவர். தமிழரசுக் கட்சியின் ஆரம்பம் முதல் அதன் இளைஞர் அணியில் முக்கியஸ்தராகப் பணியாற்றியவர். சுதந்திரன் பத்திரிகையின் முக்கிய எழுத்தாளராகப் பரிணமித்தவர். சிறுகதைகள், கட்டுரைகள் என எழுதிக் குவித்தவர். இவரது சங்கப்பலகை என்ற பத்திரிகையில் நக்கீரன் என்ற பெயரில் அரசியல் கட்டுரைகளை வழங்கியவர். நற்றமிழுக்கு நாவேந்தன் என்று புகழப்பெற்ற இவரது தேர்ந்த 26 சிறுகதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. தமிழரசுக்கட்சியின் தலைவர்களாகவிருந்த அ.அமிர்தலிங்கம், செ.இராசதுரை ஆகியோரின் சமகால நண்பராக விளங்கிய நாவேந்தன் ஆசிரியராகவும், முதலாம்தர அதிபராகவும் கல்வித்துறையில் பணியாற்றியவர். ஓய்வின் பின் யாழ் மாநகரசபையின் பதில் முதல்வராக சிலகாலம் பணியாற்றியவர். வாழ்வு, தெய்வமகன் ஆகிய இரு தொகுதிகளிலும் இடம்பெற்ற சிறுகதைகளின் தொகுப்பாக இந்நூல் அமைகின்றது. சகோதரி, அகலிகை, நம்பிக்கை, துறவியின் காதலி, உழைப்பு, சலனம், விழிப்பு, வாழ்வு, ஒருசொட்டுக் கண்ணீர், ஆசை மயக்கம், போட்டி ஒழிந்தது, பெண், காதல் வென்றது, தவறு, சுடலையாண்டி ஆகிய கதைகள்  வாழ்வு என்ற கதைத் தொகுதியிலிருந்தும், திரை, உணர்ச்சி, பிரசவம், இடைவெளி, கேள்விக்குறி, கடவுள் சாட்சி,  அழியாதது, காதல் ஒரு பொய், ஆண்மை, தெய்வ மகன், உலகப்பன் ஆகிய கதைகள் தெய்வ மகன் என்ற சிறுகதைத் தொகுதியிலும் இருந்து பெறப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Goksites Basketbal

Capaciteit Lieve Goksites Te Nederlan 2024 Plausibel and Legaal – siberian storm Gratis spins 150 Jack’s Stortingsbonus Welkomstbonus: Zebet Ginder bedragen gelijk eerste storting nodig

15797 தரணி.

கத்யானா அமரசிங்ஹ (சிங்கள மூலம்), எம்.ரிஷான் ஷெரீப் (தமிழாக்கம்). கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, இல. 202, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2020. (கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, இல. 202,