9697 நானாக நான்.

சிதம்பரபத்தினி பத்தினியம்மா திலகநாயகம்போல். ஆனைக்கோட்டை:  திருமதி பத்தினியம்மா திலகநாயகம்போல், மெதடிஸ்ட் மிஷன் பாடசாலை வீதி, வண் வடமேற்கு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2012. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டர்ஸ் பிரைவேற் லிமிட்டெட், 424, காங்கேசன்துறை வீதி).

xxii, 190 பக்கம், விலை: ரூபா 550., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-54502-0-1

இந்நூலில் தமிழ் இலக்கியத்துறையில் ஆளுமைமிக்க பெண் படைப்பாளிகளுள் ஒருவரான சிதம்பரபத்தினியின் காணாமல் போனவன், பொடியனும் போய்விடுவானா? இருந்தும் இல்லாத…, தண்ணீரிலே தாமரைப்பூ, நெஞ்சிலே மூண்ட தீ, மெய்தான் அரும்பி…, மாம்பழத்து வண்டு, தேடிவந்த செல்வம், சோதனை யாருக்கு? பாபுஜி வந்தாச்சு.., அறிவியல் அறியுமா? காலத்தின் கோலமாய்…, நானான நானில்லையே ஆகிய 13 சிறுகதைகளும், தொடுவானம் என்ற குறுநாவலும் இடம்பெற்றுள்ளன. தனது சுயத்தை இழந்து பல்வேறு சமுதாய விலங்குகளால் சிறைப்பிடிக்கப்பட்ட யாழ்ப்பாணத்துச் சமூகத்தை விமர்சிப்பதாயும், அழுக்குகளைத் தூய்மைப்படுத்த அறைகூவல் விடுவதாயும் இழந்துவிட்ட உரிமைகளை, பண்பாடுகளை மீண்டும் பெற உத்வேகம் தருவதாகவும் இக்கதைகள் அமைந்துள்ளன. இலங்கை நிர்வாக சேவையில் முதல்தர  அதிகாரியாக, யாழ். மேலதிக அரசாங்க அதிபராக, பதில் அரசாங்க அதிபராக உயர்பதவிகளை வகித்து இளைப்பாறியவர் இந்நூலாசிரியர். இவரது கலை இலக்கியப் பங்களிப்புக்காக நல்லூர் பிரதேச செயலகம் 2011இல் கலைஞானச் சுடர் விருதினை வழங்கியிருந்தது.

ஏனைய பதிவுகள்

Vikings Gratis Non Deposit Spins

De buitenkans van die voor spins zijn deze zijd het een grotere waarschijnlijkheid geven appreciren het winnen van alternatief roemen. Omdat zijn gij bi bass