தமிழ்க்கவி (இயற்பெயர்: தமயந்தி சிவசுந்தரலிங்கம்).சென்னை 600051: தமிழினி, 63, நாச்சியம்மை நகர், சேலவாயல், 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (சென்னை 14: பாவை பிரிண்டர்ஸ்).
xxx, 319 பக்கம், விலை: இந்திய ரூபா 270., அளவு: 23×15 சமீ.
தமிழ்க்கவி- ஈழவிடுதலைப் போரில் தன்னையும் இணைத்துக்கொண்ட ஒரு மூத்த எழுத்தாளர். ஈழப்போரில் உயிரை ஈந்த இரண்டு மாவீரர்களின் தாய். இவரது முதலாவது நாவல் இனி வானம் வெளிச்சிடும் என்ற பெயரில் 2002இல் வெளியாகியது. ஊழிக்காலம் என்ற இந்த நாவல், மன்னார் வட்டக்கண்டல் தொடங்கி முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் வரையான ஈழத்தமிழரின் துயரப் பயணம். 2009இன் இறுதி யுத்தகாலத்தில் இறுதிநாள் வரை தன் பிள்ளைகளோடும் பேரப்பிள்ளைகளோடும் நிலையற்று ஓடிய, அந்த ஊழிக்கால நாட்களை அனுபவபூர்வமாகவும் விமர்சனபூர்வமாகவும் இந்நாவலில் எழுதியிருக்கிறார். போராட்டக் காலத்தினூடே, களத்தினூடே நிகழ்ந்த சம்பவங்கள் இதில் விரிகின்றன. தனது வாழ்க்கை அனுபவங்களையே, தான் நடந்த பாதையில் கண்டவைகளையே இந்நாவலில் காட்சிப்படுத்துகிறார். ஈழ விடுதலைப் போராட்டத்தின் அந்தக் கணங்களை ஆவணப்படுத்தியுள்ள ஒரு முக்கிய இலக்கிய முயற்சி இதுவாகும்.