9723 சதாசிவ லீலா சரித்திரம்.

சு.பொன்னம்பலம். கொழும்பு: சு.பொன்னம்பலம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1929. (கொழும்பு: மெய்கண்டான் அச்சியந்திரசாலை, 99, ஆதிருப்பள்ளித் தெரு).

(4), 60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

வசன கவிதைகளாக வளரும் இந்நாவல், 1929இல் எழுதப்பெற்று வேலணை இளந்தமிழ்ச் சரவணனாரின் சிறப்புரையையும் கொண்டமைந்துள்ளது. இந்நூலில் இயற்கையின் வழியெழுந்த தெய்வக் காதலை, நேரே காணலாம். நாவலின் கதாநாயகன் சதாசிவன் என்ற இளைஞன், அரச சேவையில் இணைந்து கண்டியில் வசிப்பவன். (முற்பிறப்பின்) முன்னைத் தொடர்பின்  ஊழ்வினை காரணமாக லீலா என்னும் அருங்குணம் கொண்ட சிங்கள இளம்பெண்ணைச் சந்திக்கிறான். இவர்கள்இருவரிடையே வளரும் இறுக்கமான காதல்- இடம், பொருள்,காலம், குலநலன் ஆகியவற்றை மீறி தெய்வீகக் காதலாக மலர்கின்றது.  குலத்துங்க முதலியார் சதாசிவத்திற்கு விருந்து கொடுத்தல், காதலர் கல்யாணஞ்செய்ய வாக்களித்தல், சதாசிவம் தகப்பனுக்குக் கடிதமெழுதல், வயித்திலிங்கர்; மகனுடைய காகிதம் வாசித்துக் கோபம் கொள்ளல், வயித்திலிங்கர் தமிழர் பெருமை கூறல், சிங்களரைக் குறைகூறல், வயித்திலிங்கர் மனைவி மகன் பக்கம் பேசிச் சில நியாயங்கூறல், வயித்திலிங்கர் மகனுக்குக் காகிதமெழுதுதல், சதாசிவம் காகிதம் வாசித்துக் கிலேசமுறல், சதாசிவத்தாலெல்லோர்க்கும் கலக்கம், வயித்திலிங்கரும் மனைவியும் வருத்தச்செய்தியறிதல், வயித்திலிங்கரும் மனைவியும் கண்டிக்குச் செல்லல், வயித்திலிங்கரும் மனைவியும் மகனைக் காணுதல், வயித்திலிங்கரும் மனைவியும் குலத்துங்கர் வீடு செல்லல், கல்யாணம் சோடினையாரவாரங்கள், மணமகன் பெண் வீட்டிற்கு வருதல், கல்யாண மண்டபம், எல்லோரும் விருந்துண்ணல், கூட்டங்குலைந்து சனங்கள் போதல், ஆகிய தலைப்புகளில் இந்நாவல் விரித்துச் செல்லப்படுகின்றது.  சுதந்திரத்துக்கு முந்தைய தமிழ் சிங்கள சமூக உறவு பற்றிய புரிந்துணர்வூட்டும் வகையில் இந்நாவல் அமைந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

An educated Slots For Mobiles

Blogs Do you know the Better Totally free Slots? Better The newest Position Web site To have Prompt Distributions Studying Position Game Kinds Understand that

Zagraj w automat internetowego!

Content Fruit Mania PayPal: Uciechy pod automatach Czy warto wystawiać przy automaty online? Które to znajdują się do kupienia metody płatności przy kasynach online? Typy