9737 மீண்டும் வருவேன் (நாவல்).

செங்கை ஆழியான் (இயற்பெயர்: க.குணராசா). யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 75/10ஏ, பிரவுண் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2007. (கொழும்பு 13 : யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

iv, 164 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 17×12.5 சமீ., ISBN: 978-955-1624-03-3.

இரண்டரை தசாப்தங்களுக்கு மேலாகப் பின்தங்கிய புராதன வன்னிக் கிராமப் புறங்களிலும் குடியேற்றக் கிராமங்களிலும் பணி நிமித்தம் வாழ்ந்தவர் செங்கை ஆழியான். அந்த மக்களோடு ஒட்டி உறவாடியவர். சூதுவாதற்ற அக்கிராம மக்களது உயர்ந்த மானிடநேயம் மனுக்குலம் உள்ளவரை நினைவில் கொள்ளத்தக்கது என்கிறார். இலகுவில் நம்பமுடியாத எவராலும் சாதாரணமாக ஜீரணிக்கமுடியாத மனிதர்கள் அக்கிராமங்களில் வாழ்வதாகக் கூறும் ஆசிரியர், அறுகுவெளிக் கிராமத்தின் மானிட இயக்கத்தை அங்கு தொழில்நிமித்தம் பணியாற்றச் சென்ற விதானையார் காந்தலிங்கம் மூலமும், கரந்துறைய அக்கிராமத்திற்கு வந்துசேர்ந்த ஈழப்போராளி சபாலிங்கன் மூலமாகவும் அவர்களின் நோக்கில் இந்நாவலில் காட்டியிருக்கிறார். ஈழப் போராட்டத்தினை முன்னெடுத்த நாற்பத்திரண்டு இளைஞர்களில் சபாலிங்கனும் ஒருவன். உறவுமுறையில் ஆசிரியரின்  கூடப்பிறந்த சகோதரியின் மகன். அவனுடைய ஆரம்பகாலப் போராட்ட வாழ்வின் ஒரு சிறு புள்ளியை இந்நாவலில் சபாலிங்கன் வடிவில் ஆசிரியர் இட்டுள்ளார். முதுபெரும் ஈழத்துப் படைப்பாளி செங்கைஆழியான் தான் வாழ்ந்து உணர்ந்த  ஒரு கிராமத்தின் கதையையே மீண்டும் வருவேன் என்ற நாவலில்  உணர்வுபூர்வமாகச் சொல்கின்றார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 192954).

ஏனைய பதிவுகள்

Stort 1 Eur Kosteloos Spins

Grootte Betaalmogelijkheden Te 1 Euro Deponeren Casinos | red baron Geen stortingsvrije spins Betnation Gokhuis Veelgestelde Vragen Overheen Casninos Diegene Noppes Spins Te Registratie Inzetten

No-deposit Extra Requirements 2024

Posts More Casino Codes and you may Put An assessment Different kinds of Join Incentives How do i Allege The benefit Requirements From the Ignition