9739 யுக சந்தி.

வி.கே.ரட்ணசபாபதி (புனைபெயர்: மணிவாணன்). கொழும்பு: வீரகேசரி பிரசுரம், த.பெட்டி எண் 160, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1972. (கொழும்பு 14: Express Newspapers Ltd., 185, Grand Pass Road)

(2), 176 பக்கம், விலை: ரூபா 2.25, அளவு: 18.5×12.5 சமீ.

தினகரனில் தொடராக வெளிவந்த இந்நாவல் இலங்கையின் கோரமான இனவெறியின் இரத்தக்கறை படிந்த ஒரு சகாப்தத்தின் பின்னணியிலே வாழத்துடிக்கும் மக்களின் உணர்ச்சிப் போராட்டங்களை மையமாகக் கொண்டு மலர்ந்தது. 1958 இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டு தருமபுர விவசாயக் கிராமத்தில் குடியேறி பாடசாலை ஆசிரியராகக் கடமையாற்றிய பூரணம், கனகம், சிவபாதம் ஆகியோரைச் சுற்றிக் கதை பின்னப்படுகிறது. வஞ்சிக்கப்பட்ட தங்கை கனகேசின் வாழ்க்கை அநாதரவாகி விடும் என்பதற்காக சிவபாதத்தின் காதலை ஏற்க மறுக்கிறாள் கனகம். ஆசிரியை பூரணம் இடமாற்றம் பெற்றுச் சென்றபின் அவள்தான் தன் தாய் என்பதை அறிந்து கொள்கிறான் சிவபாதம். பல்வேறு உணர்வுப் போராட்டங்களுக்கிடையில்,  ஈழத்து விவசாயக் கிராமமான தர்மபுரத்தை கதைத் தளமாகக் கொண்டு கதை சுவையாக நகர்த்தப்படுகிறது. 

ஏனைய பதிவுகள்

Free Harbors Zero Download

Articles Popular All of us Online slots games To try At no cost First What to expect From our Approved Harbors Internet sites Ozzy Osbourne