அ.சே.சுந்தரராஜன் (பதிப்பாசிரியர்). சுன்னாகம்: அ.சே.சுந்தரராஜன், கல்லூரி அகம், இராமநாதன் கல்லூரி, 1வது பதிப்பு, 1956. (அச்சக விபரம் தரப்படவில்லை).
120 பக்கம், விலை: இந்திய ரூபா 1.50, அளவு: 21×14 சமீ.
இலங்கை முன்னாள் அமைச்சரும், யாழ். பரமேஸ்வரா கல்லூரித் தலைவருமான சு.நடேசபிள்ளை அவர்களின் முன்னுரையுடன் கூடியது. கும்பகர்ணன் வதைப்படலத்தின் கதைத் தொடர்பு முதலாவதாகவும் அதனைத் தொடர்ந்து, செய்யுள்களின் மூலம், உரை என்பன அடுத்ததாகவும் தரப்பட்டுள்ளன. பாடபேதங்கள், பயிற்சி வினாக்கள், ஆராய்ச்சி வினாக்கள், மாதிரி வினாக்கள் என்பன நூலை முக்கியத்துவமாக்குகின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 87083).