9754 கம்பராமாயணம்- குறளில் உணர்ச்சிவளம்: இரண்டாம் புத்தகம்.

இரத்தினம் நவரத்தினம். யாழ்ப்பாணம்: சிவதொண்டன் நிலையம், காங்கேசன்துறை வீதி, வண்ணார்பண்ணை, 1வது பதிப்பு, 1958. (சென்னை 18: ஜுப்பிட்டர் பிரஸ்).

88 பக்கம், விலை: ரூபா 1.60, அளவு: 18.5×13 சமீ.

திருக்குறளில், இராமாயணத்தின் சாரமாக விளங்கும் ஒழுக்கமுறைமைகள் யாவும் அமைந்திருப்பதை இந்நூல் பதிவுசெய்கின்றது. இவ்விரு பெரு நூல்களையும் இயற்றிய இரு பெரும் புலவர்களும், அறம் – பொருள் – இன்பம் ஆகிய உலகியற் பொருள் மூன்றினையும் பற்றி விவரித்துப் பேசும் பகுதிகள் பல தம்முள் ஒத்த கருத்தினைக் கொண்டுள்ளதை இவ்விரு நுல்களையும் ஒப்புநோக்கும் ஆராய்ச்சியாளர்கள் எளிதில் கண்டுகொள்வர். வள்ளுவர் கூறும் குறள் கருத்துக்கு ஒப்பவே கம்ப ராமாயணத்தில் வரும் கதாபாத்திரங்களும் விளங்குகின்றன என்பதை சீதை-வாழ்க்கைத் துணைநலம், இராமன்-அறன் வலியுறுத்தல், இராமனும் சீதையும்-ஊழ், தசரதர்- மக்கட்பேறு, இலட்சுமணன்- அன்புடைமை, பரதன்- பண்புடைமை, இராவணன்- புகழ், குகன்- பெரியாரைத் துணைக் கோடல், விபீஷணன்- தெரிந்து தெளிதல், அனுமான்- பொச்சாவாமை, திருவள்ளுவரும் கம்பரும் கருதும் நன்மக்களின் வாழ்க்கை வழித்துறை ஆகிய பதினொரு இயல்களில் ஆசிரியர் தனித்தனி அத்தியாயங்களின் வழியாக விளக்குகின்றார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 98557).

ஏனைய பதிவுகள்

Totals Versus Advances

Posts An educated On the internet Sportsbooks For Gambling To the Hockey Spreads: ladbrokes acca insurance rules Sports Playing Research Improved Chance Compared to Fixed