9773 தெரிந்துகொள்ள வேண்டிய தெவிட்டாத தகவல்கள்: தமிழக, ஈழத்து இலக்கிய வரலாறுகள், வினா-விடைகள்.

குணரட்ணம் ஐங்கரன் (தொகுப்பாசிரியர்). முருங்கன்: குணரட்ணம் சத்தியப் பிரியா, உயரிய பேரார்வ கல்லூரி, 1வது பதிப்பு, ஆனி 2009. (வவுனியா: ஆகாஷ் பிரிண்டர்ஸ்).

(12), 104 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20×14.5 சமீ.

யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகக் கொண்ட நூலாசிரியர் முருங்கன் உயரிய பேரார்வக் கல்லூரியின் சிரேஷ்ட தமிழ் ஆசிரியராகப் பணியாற்றுபவர். பழம்பெரும் தமிழ் நூல்களின் கருத்துக்களையும் இலக்கிய வரலாறுகளையும் வினா-விடை வடிவில் இந்நூலில்  மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக வழங்கியுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 205865).   

ஏனைய பதிவுகள்

10217 அனைத்து தேசிய பிரஜைகளுக்கும் சம உரிமையை பெற்றுக் கொள்வதற்கான அத்தியாவசிய நுழைவு.

சம உரிமை இயக்கம். கோட்டே: சம உரிமை இயக்கம், 402/2, தலவத்துகொட பாதை, மாதிவெல, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை). (2), 28 பக்கம், விலை: ரூபா 50., அளவு: