9774 பிரித்தானியர் ஆட்சியும் நவீனமயமாக்கமும்.

சி.பத்மநாதன், க.இரகுபரன், ஸ்ரீ பிரசாந்தன் (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்,248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

xxxii, 672 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-955-9233-23-7.

1992ஆம் ஆண்டுமுதல் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், வருடாந்த இந்து சமய தமிழிலக்கிய ஆய்வரங்குகளை நடத்திவருகின்றது. 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் 14ம் திகதிமுதல் மூன்றுநாட்கள் தொடர்ந்து பிரித்தானியர் ஆட்சியும் நவீனமயமாக்கமும் என்ற தலைப்பில் இவ்வாய்வரங்கு இடம்பெற்றது. இவ்வாய்வரங்கின்போது,  தென்னிந்திய, மலேசிய, இலங்கை அறிஞர்களால் 19 அமர்வுகளில் சமர்ப்பிக்கப்பட்ட60 கட்டுரைகளில் 30 கட்டுரைகளுக்கு மேல் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இலக்கியமும் கலையும் என்ற பிரிவில் தமிழ் இலக்கியப் போக்கில் பாரதி (க.பஞ்சாங்கம்), பாரதியும் வடமொழியும் (வி.சிவசாமி), நவீனத்துவமும் பாரதியும் (எம்.ஏ.நுஃமான்), ஆங்கிலேயர் காலத்தில் கிறிஸ்தவ மிஷனரிமாரின் தமிழ்ப்பணி (எஸ்.ஜெபநேசன்), 19ஆம் நூற்றாண்டில் தமிழ் அச்சுப் பண்பாடும் புத்தக உருவாக்கமும் (வீ.அரசு), நவீன தமிழ் இலக்கியத் திறனாய்வின் தோற்றம் (க.பஞ்சாங்கம்), அறிவுப் பரவலும் திருச்சதிரின் மீட்டுருவாக்கமும் (சபா ஜெயராசா), பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் தென்னிந்திய இசையின் வளர்ச்சி (மீரா வில்லவராயர்), தென்னிந்திய இசையின் பொற்காலம் (க.இரகுபரன்),  தமிழில் தூது இலக்கியம் (றூபி வலன்ரீனா பிரான்சீஸ்), தமிழ் நூல்களின் சிங்கள மொழிபெயர்ப்பு முயற்சிகள் (தம்மிக்க ஜயசிங்க), தமிழ் அகராதித்துறை வளர்ச்சியில் சதுரகராதி (செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்), நவீனமயமாக்கல் சூழலில் ஈழத்தின் தமிழ் மொழி (செ.யோகராஜா) ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சமூகமும் சமயமும் என்ற பிரிவில், ஆங்கிலேய காலனிய ஆட்சியும் இந்திய தேசியமும் (இ.முத்தையா), மரபுவழிக் கல்வியைப் பாதுகாக்க முயன்ற நிறுவனங்கள் (ஈஸ்வரநாதபிள்ளை குமரன்), பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் நிலவிய சைவமரபுக் கல்வி (சிவகௌரி சிவகுருநாதன்), 19ஆம் நூற்றாண்டுத் தமிழ்ச் சூழலில் நாத்திக இயக்கம் (வீ.அரசு), இலங்கையில் இராமகிருஷ்ண மிஷன் (வ.குணபாலசிங்கம்), தோட்டத் தொழிலாளர் குடியேற்றத் திட்டமும் மலேசியத் தமிழர் வாழ்வியலும் (கிருஷ்ணன் மணியம்), மலேசியத் தமிழ்க் கல்வி வளர்ச்சி (கிருஷ்ணன் மணியம்), பிரித்தானியராட்சிக் கால மட்டக்களப்பில் சைவ மறுமலர்ச்சி (நா.வாமன்), பிரித்தானியராட்சிக் காலத்தில் மலாயா இந்தியர்களிடையே ஏற்பட்ட கலாசார மறுமலர்ச்சி (எஸ்.குமரன்), பிரித்தானியர் ஆட்சியும் நவீனமயமாக்கமும் (க.பஞ்சாங்கம்), தமிழ்ச் சூழலில் நவீனமயவாக்கமும் பெண்களும் (செ.யோகராசா), இந்து மதம் சார்பான ஈழத்துப் பத்திரிகைகள் ( செல்வகுமாரி சிவலிங்கம்), ஆங்கிலேயர்கால ஈழத்துச் சைவசமய வளர்ச்சியில் சைவ நிறுவனங்களின் பங்களிப்பு (கந்தையா அருந்தவராஜா), பிரித்தானியராட்சியில் இலங்கை முஸ்லிம் சமுதாயத்தின் எழுச்சி (றமீஸ் அப்துல்லா), பிரித்தானியர் காலத்தில் இலங்கையில் தோன்றிய இந்து சமய நூல்கள் (சுகந்தினி சிறி முரளிதரன்), தருமபுர ஆதீனம் (வசந்தா வைத்தியநாதன்), இந்திய வரலாற்று வரைவியலின் புதிய நோக்கு (அனுசூயா சேனாதிராஜா) ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அறிவும் ஆளுமையும் என்ற பிரிவில் இலங்கையில் கிறிஸ்தவ மிஷனரிகளும் ஆறுமுக நாவலரும் (சி.பத்மநாதன்), சைவ சமய மறுமலர்ச்சியில் ஆறுமுக நாவலர் (ப.கோபாலகிருஷ்ண ஐயர்), நாவலர் பணிகளில் நவீனத்துவம் (ஸ்ரீ பிரசாந்தன்), நவீனத்துவ சமய சமுதாய உருவாக்கத்தில் வள்ளலாரின் பங்கும் பணியும் (கலைவாணி இராமநாதன்), பகவான் ரமணரிஷியின் ஆன்மீக வாழ்க்கையும் அவரது தத்துவச் சிந்தனைகளும் (ஏ.என்.கிருஷ்ணவேணி), சுதந்திரம் பற்றிய நோக்கு நிலையில் சுவாமி விவேகானந்தர் – சுப்பிரமணிய பாரதியார் (சாந்தி கேசவன்), ஆனந்த குமாரசுவாமி (கி.சச்சிதானந்தம்), தமிழ்ப் பதிப்புத்துறையில் சி.வை. தாமோதரம்பிள்ளையின் ஆளுமை (ஸ்ரீ பிரசாந்தன்), இந்தியத் தாந்திரீகம் பற்றிய புரிதலில் சேர் ஜோன் வூட் றொவ் (ச.முகுந்தன்), தமிழ்ச் சமூகத்தில் மார்க்சியத்தின் அறிமுகம்: சிங்காரவேலரை முன்வைத்து (ந.முத்துமோகன்), சுவாமி விபுலானந்தர் (சு.துஷ்யந்த்), இந்து மதத்தின் நவீனமயவாக்கத்தில் சுவாமி விவேகானந்தர் (விக்னேஸ்வரி புவிநேசன்), ஸ்ரீ அரவிந்தர் (சாந்தி நாவுக்கரசன்) ஆகிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Better A real income Vegas Harbors

Blogs Ming dynasty online slot: Information regarding Australian Condition Gaming Withdraw The Payouts Enter into Bonus Code On the Cashier Page and you will Deposit

Play 100percent Free Games

Content The Best Free Games Casinos What Casino Games Are Available On Android? Which Payment Methods Offer The Fastest Cashouts At Online Casinos? This will