9781 தமிழ்ப் பா வடிவங்கள்: பல்லவர்கால இலக்கியங்களின் யாப்பு வடிவங்கள் பற்றி ஆய்வு.

அ.சண்முகதாஸ். யாழ்ப்பாணம்: தமிழ்த்துறை வெளியீடு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1982. (அச்சக விபரம் தரப்படவில்லை).

vi, 137 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×20.5 சமீ.

வரலாறும் இலக்கியப் பின்னணியும், ஆசிரியப் பாவின் வளர்ச்சி நிலைகள், வெண்பாவும் அதன் வளர்ச்சி நிலைகளும், கலிப்பாவும் அதன் வளர்ச்சி நிலைகளும், பாவினம் பிறந்தது, பாவினங்களின் வளர்ச்சி, யாப்பு வடிவங்களில் நாட்டுப்பாடற் செல்வாக்கு ஆகிய ஏழு இயல்களில் இந்நூல் பல்லவர்கால இலக்கியங்களின் யாப்பு வடிவங்கள் பற்றி ஆராய்கின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  69734).

ஏனைய பதிவுகள்

12268 – நம் அனைவரதும் நாடு.

சுமனசிறி லியனகே. கொழும்பு: திட்டமிடுதல் மற்றும் வடிவமைப்புப் பிரிவு, இன விவகார மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு, 1வது பதிப்பு, 1997. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகத் திணைக்களம்). (4), 28 பக்கம், சித்திரங்கள்,