9783 பதிற்றுப்பத்து: ஆராய்ச்சியுரை.

சு.அருளம்பலம். காரைநகர்: அ.சிவானந்தநாதன், 1வது பதிப்பு, 1960. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம்).

xxiv, 424 பக்கம், விலை: ரூபா 6.50, அளவு: 22.5×14.5 சமீ.

பழையவுரை, ஒப்புமைப் பகுதி, பலவகை ஆராய்ச்சிக் குறிப்புகள் முதலியவற்றுடன் மதுரைத் தமிழ்ச்சங்க அங்கத்தவரும் காலி அரசாங்க உயர்தர கலாசாலையின் முன்னைநாள் தலைமையாசிரியருமான பண்டிதர் சு.அருளம்பலவனார் இவ்வாராய்ச்சியுரையை இயற்றியுள்ளார். பண்டைத் தமிழ்சங்க இலக்கியங்களுள் பதிற்றுப்பத்து முக்கியமானது. சேர அரசர் பதின்மர்மீது நல்லிசைப்புலவர் பதின்மரால் பாடப்பெற்ற பப்பத்துப் பாடல்கள் கொண்ட பத்துப் பகுதிகளின் தொகுப்பே பதிற்றுப்பத்தாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 39229).     

ஏனைய பதிவுகள்