9785 முப்பானூற் சுருக்கம்.

வி.வேலுப்பிள்ளை. யாழ்ப்பாணம்: வி.வேலுப்பிள்ளை, கோப்பாய், 1வது பதிப்பு, குரோதன ஆண்டு சித்திரை மாதம் 1925. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சியந்திரசாலை).

245 பக்கம், விலை: ரூபா 3.00, அளவு: 21×13.5 சமீ.

திருக்குறளின் முப்பாலினதும் சுருக்க விளக்கமாக அமையும் இந்நூலில்  அறத்துப்பால் என்ற முதற்பிரிவில் பாயிரம் (நூல்வரலாறு, கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, அறன் வலியுறுத்தல்), இல்லறவியல் (இல்வாழ்க்கைச் சிறப்பு, அன்புடைமை, விருந்தோம்பல், நடுவுநிலைமை, ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, அழுக்காறாமை, புறங்கூறாமை, தீவினையச்சம், ஈகை), துறவறவியல் (அருளுடைமை, தவம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, நிலையாமை, துறவு, மெய்ஞ்ஞானம்)ஆகியன உள்ளடக்கப்படுகின்றன. பொருட்பால் என்ற இரண்டாம் பிரிவில்  அரசியல்(அரசன், மானம், கல்வி, பெரியாரைத் துணைக்கோடல், வினைசெயல்வகை, செங்கோன்மை, ஊக்கமுடைமை), அங்கவியல் (அமைச்சு, மன்னரைச் சேர்ந்தொழுகல், பொருட்சிறப்பு, நல்குரவு, பொருள்செயல் வகை, நட்பு, பகை, வியபிசாரம், கள்ளுண்ணல், சூது, மருந்து) ஆகியனவும்  மூன்றாம் பிரிவான காமத்துப்பால் என்ற பிரிவில் களவு, கற்பு ஆகியனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  129393). 

14A34

முப்பானூற் சுருக்கம்.

வி.வேலுப்பிள்ளை (மூலம்), ஆறு.திருமுருகன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2019. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

xi, 228 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

30.08.2019 அன்று வடமாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினர் ஒழுங்குசெய்திருந்த திருக்குறள் வாரம் நிகழ்ச்சியையொட்டி வெளியிடப்பட்ட ஐந்து நுல்களில் இதுவும் ஒன்றாகும். கோப்பாய் வி.வேலுப்பிள்ளை அவர்கள் 1925இல் யாழ்ப்பாணம், ஸ்ரீ சண்முகநாத அச்சியந்திரசாலையில் அச்சிட்டு வெளியிட்ட நூலின் மீள்பதிப்பு இதுவாகும். திருக்குறளின் முப்பாலினதும் சுருக்க விளக்கமாக அமையும் இந்நூலில்  அறத்துப்பால் என்ற முதற்பிரிவில் பாயிரம் (நூல்வரலாறு, கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, அறன் வலியுறுத்தல்), இல்லறவியல் (இல்வாழ்க்கைச் சிறப்பு, அன்புடைமை, விருந்தோம்பல், நடுவுநிலைமை, ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, அழுக்காறாமை, புறங்கூறாமை, தீவினையச்சம், ஈகை), துறவறவியல் (அருளுடைமை, தவம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, நிலையாமை, துறவு, மெய்ஞ்ஞானம்)ஆகியன உள்ளடக்கப்படுகின்றன. பொருட்பால் என்ற இரண்டாம் பிரிவில்  அரசியல்(அரசன், மானம், கல்வி, பெரியாரைத் துணைக்கோடல், வினைசெயல்வகை, செங்கோன்மை, ஊக்கமுடைமை), அங்கவியல் (அமைச்சு, மன்னரைச் சேர்ந்தொழுகல், பொருட்சிறப்பு, நல்குரவு, பொருள்செயல் வகை, நட்பு, பகை, வியபிசாரம், கள்ளுண்ணல், சூது, மருந்து) ஆகியனவும்  மூன்றாம் பிரிவான காமத்துப்பால் என்ற பிரிவில் களவு, கற்பு ஆகியனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன. (முன்னைய பதிப்பிற்கான  நூல்தேட்டம் பதிவிலக்கம் 9785).

ஏனைய பதிவுகள்

Gambling establishment Video game

Articles What’s the Judge Gaming Years? – casino Supreme Hot Duckyluck Casino: Greatest United states Casino To possess Cellular Gamble Security and safety Finest Web