9809 தமிழின் நவயுகம்: பிரித்தானியர் ஆட்சியும் நவீனமயமாக்கமும்: ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2011.

ஸ்ரீ பிரசாந்தன், தேவகுமாரி ஹரன் (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி).

viii, 160 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 25×17.5 சமீ., ISBN: 978-955-9233-20-6.

1992ஆம் ஆண்டுமுதல் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், வருடாந்த இந்து சமய தமிழிலக்கிய ஆய்வரங்குகளை நடத்திவருகின்றது. 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் 14ம் திகதிமுதல் மூன்றுநாட்கள் தொடர்ந்து பிரித்தானியர் ஆட்சியும் நவீனமயமாக்கமும் என்ற தலைப்பில் இவ்வாய்வரங்கு இடம்பெற்றது. இவ்வாய்வரங்கின்போது,  தென்னிந்திய, மலேசிய, இலங்கை அறிஞர்களால் 60 கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. அந்நிகழ்வு நாளில் இம்மலரும் விநியோகிக்கப்பட்டது. இதில் பல்வேறு நூல்களிலுமிருந்து தேர்ந்த 15 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. நவீன இலக்கியத்தின் அடிப்படைகள் (க.கைலாசபதி), தமிழ் நவீனத்துவத்தின் முன்னோடிகள் (பாலா), தமிழ்ப் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும் நவீனவாக்கமும் மேற்குலகின் பங்கும் பணியும் (கா.சிவத்தம்பி), புதிய துறைகளில் உரைநடை (நா.வானமாமலை), தமிழும் அகராதியும் (எஸ்.வையாபுரிப்பிள்ளை), பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலக்கியம் (எஸ்.வையாபுரிப்பிள்ளை), பத்தொன்பதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் வளர்ச்சி (பொ.பூலோகசிங்கம்), பத்தொன்பதாம் நூற்றாண்டின் இலக்கண நூல்கள் (மயிலை சீனி.வேங்கடசாமி), பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் அச்சுப் பண்பாடும் புத்தக உருவாக்கமும் (வீ.அரசு), கிறிஸ்தவ மிஷனரிமார் தமிழுக்கு ஆற்றிய பணி (கே.ஈ.மதியாபரணம்), பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் தமிழ் நாடகம் (அ.ச.ஞானசம்பந்தன்), தென்னிந்திய இசையின் பொற்காலம் (க.இரகுபரன்), நவீனமயமாக்கல் சூழலில் ஈழத்தில் தமிழ்மொழி (செ.யோகராசா), நாவலர் பணிகளில் நவீனத்துவம் (ஸ்ரீ பிரசாந்தன்), நவீனத்துவமும் பாரதியும் (எம்.ஏ.நுஃமான்) ஆகிய கட்டுரைகள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

No-deposit Harbors

Content Positives and negatives Of No deposit Incentives You Claimed A free of charge Twist Online casino Discount coupons Greatest Online Position Game Over the