9810 தவத்திரு தனிநாயக அடிகளாரின் படைப்புகள்.

தவத்திரு தனிநாயக அடிகளார் நூற்றாண்டு விழாக் குழு. சென்னை 600094: தவத்திரு தனிநாயக அடிகளார் நூற்றாண்டு விழாக் குழு, 4, சௌராஷ்டிரா நகர், 7ஆவது தெரு, சூளைமேடு, இணை வெளியீடு, சென்னை 600108: பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, 2வது பதிப்பு, ஜுன் 1993, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2013. (சென்னை: ஈகிள் பிரஸ்).

viii, 397 பக்கம், விலை: இந்திய ரூபா 200., அளவு: 21.5×15 சமீ.

இத்தொகுப்பில் தனிநாயகம் அடிகளார் எழுதிய ஒன்றே உலகம், திருவள்ளுவர், சங்க காலத்தில் விரிவாகும் ஆளுமையின் இயல்பு, தமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும், தமிழ்த்தூது ஆகிய ஐந்து ஆக்கங்கள் முழுமையாக இடம்பெற்றுள்ளன. ஒன்றே உலகம் என்ற நூல், தனிநாயகம் அடிகளார் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்தவேளை அவ்வந்நாடுகளில் கிடைக்கப்பெற்ற சுவையான பல தகவல்களைக் கண்டறிந்து அடிகளார் எழுதிய நூலாகும். ஜப்பான், ஐக்கிய அமெரிக்கா, தென் அமெரிக்கா, சோவியத் ஒன்றகம், இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி, வத்திக்கான் நகர், கிரேக்க நாடு, போர்த்துக்கல், ஐரோப்பாவின் சிறு நாடுகள், ஆப்பிரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்கா, நடுகிழக்கு நாடுகள், தாய்லாந்து, கம்போதியா, வியட்நாம், பர்மா, இந்தோனேசியா ஆகிய 21 நாடுகளின் தலைப்புகளில் தனித்தனி இயல்களில் சுவையான பிரயாண இலக்கியமாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. திருவள்ளுவர் என்ற இரண்டாவது  நூல், டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளையின் அன்னையார் பெயரில் அமைந்த சொர்ணம்மாள் அறக்கட்டளையில் அடிகளார் நிகழ்த்திய  சொற்பொழிவு ஆகும். இந்நூல் வள்ளுவரும் கிரேக்க ஒழுக்க இயலும், வள்ளுவரும் உரோமிய ஒழுக்க இயலும், வள்ளுவரும் புத்தரின் ஒழுக்க இயலும் ஆகிய மூன்று பிரிவுகளில் எழுதப்பட்டுள்ளது. மூன்றாவது ஆக்கம், சங்ககாலத்தில் விரிவாகும் ஆளுமையின் இயல்பு என்ற கட்டுரையாகும். நான்காவதாக அமைந்த கட்டுரை தமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும் என்ற பெயரில் அமைந்த தந்தை செல்வா நினைவுப்பேருரையாகும். இது தந்தை செல்வா அறங்காவல் குழுவினால் 1980இல் வெளியிடப்பட்ட சிறு நூலாகும்.  இறுதியாக அமைந்தது தமிழ்த்தூது என்ற அடிகளாரின் கட்டுரைக் கொத்து. இதில் தமிழ்த்தூது, சங்க இலக்கியத்தின் சிறப்பியல்புகள், மலரும் மாலையும், காப்பியக் கவிஞர் வீரமாமுனிவர், தமிழ்நாட்டின் ஆசிரியர் வேதநாயகம்பிள்ளை, செந்தமிழ் வளர்ச்சி, தமிழரும் அவர்தம் கவின் கலைகளும், தமிழ்கூறும் நல்லுலகம் ஆகிய எட்டு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Живые Игры в Slottica Casino – Выразительные Эмоции и Настоящее Удовольствие от Игр

С приходом новых технологий азартные развлечения стали не только доступнее, но и более интерактивными. Виртуальные площадки предлагают игрокам уникальную возможность – испытать все прелести традиционных

Spingenie Gambling enterprise

Posts Just what are Aussie fifty 100 percent free Spins No deposit Online casinos? Free Spins No deposit Ports Ireland Claim Your own Offers And

13545 மகாவலியே மாநதியே: மெல்லிசைப் பாடல்கள்.

மலரன்பன். கண்டி: மலையக வெளியீட்டகம், த.பெ.எண் 32, 1வது பதிப்பு, ஜுலை 2001. (மாத்தளை: அலங்கார் ஓப்செட் பிரிண்டிங், 405, பிரதான வீதி). (2), 60 பக்கம், விலை: ரூபா 90.00, அளவு: 20.5×15