கார்த்திகேசு சிவத்தம்பி. சென்னை 600002: மக்கள் வெளியீடு, 49, உனிசு அலி சாகிப் தெரு, எல்லிசு சாலை, 1வது பதிப்பு, நவம்பர் 2001. (சென்னை 600005: தேவா ஆப்செட்).
216 பக்கம், விலை: இந்திய ரூபா 70., அளவு: 21.5×14 சமீ.
பேராசிரியரின் பல்வேறு படைப்பாக்கங்களுள் தேர்ந்த கட்டுரைகளின் தொகுப்பாயமைந்த இந்நூலில், தமிழில் நவீன இலக்கியம் என்ற பொதுத் தலைப்புக்குள் வரக்கூடியதாக அவரால் எழுதப்பெற்ற ஒன்பது கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. நவீன தமிழிலக்கியத்தின் சமூகப் பின்புலம்: ஒரு இலக்கிய வரலாற்றுச் சுருக்கம், பாரதியின் மகாவித்துவச் சாதனை: தமிழிலக்கியப் பரப்பிற் பாரதி பெறும் முக்கியத்துவம் பற்றிய ஒரு குறிப்பு, தமிழ் இலக்கிய வரலாற்றில் இதழ்கள்: விரிவான ஆய்வுக்கான முன் குறிப்புகள் சில, நவீன தமிழிலக்கிய வரலாற்றில் மணிக்கொடி: வரன்முறையான மதிப்பீட்டின் அத்தியாவசியம், தமிழிலக்கியத்தின் நவீன காலம் இன்னும் தொடர்கிறதா?, தமிழில் பின்நவீனத்துவம் பற்றிப் பேசப்படுவதன் முன்: தமிழில் நவீனத்துவம் குறிக்கும் தொகுநிலை அர்த்தங்கள் பற்றிய ஒரு ஒப்புநோக்குக் குறிப்பு, அண்மைக்காலத்து மேனாட்டு இலக்கிய விமர்சனம்: ஓர் அறிமுகக் குறிப்பு, மார்க்சியமும் இலக்கிய விமர்சனச் சமகாலச் செல்நெறியும், பின்னவீனத்துவம்: அதன் சிந்தனைப் பின்புலம், கலை, இலக்கிய, அரசியற் பரிமாணங்கள் ஆகியன பற்றிய ஒரு அறிமுக விமர்சிப்பு ஆகிய ஒன்பது கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.