9814 படைப்பின் கதவுகள்: இலக்கியக் கட்டுரைகள்.

த.அஜந்தகுமார். கரவெட்டி: புதிய தரிசனம், வதிரி, 1வது பதிப்பு, ஐப்பசி 2013. (கரவெட்டி: தமிழ்ப் பூங்கா, நெல்லியடி).

vi, 126 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-53043-7-5.

சிறுகதைகள் பற்றிய பார்வைகள், படைப்பு-படைப்பாளி-விமர்சனம், பொது ஆகிய மூன்று பிரிவுகளின்கீழ்  எழுதப்பட்ட 26 இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும். உதயன் பத்திரிகையின் ஞாயிறு  சூரியகாந்தியில் ஒரு சோம்பேறியின் பக்கம் என்ற தலைப்பில் 2012-2013 காலகட்டத்தில் எழுதப்பட்டவையும், ஜீவநதி சஞ்சிகைக்காக எழுதப்பட்டவையுமான கட்டுரைகள் இவை. ஈழத்துப் புலம்பெயர் இலக்கியச் சூழலில் பல்துறைப் படைப்பாளியாக அறியப்பட்ட  தருமராசா அஜந்தகுமார், தனித்துத் தெரியும் திசை என்ற ஆய்வு நூலையும்,  ஒரு சோம்பேறியின் கடல் என்ற கவிதைத் தொகுதியையும் முன்னர் வெளியிட்டவர்.

ஏனைய பதிவுகள்

13500 பிரசவ வைத்தியம் Midwifery.

அ.சுப்பிரமணியபிள்ளை. மானிப்பாய்: அ.சுப்பிரமணியபிள்ளை, 1வது பதிப்பு, 1892. (யாழ்ப்பாணம்: அச்சுவேலி இயந்திரசாலை, அச்சுவேலி). (4), 87 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 16×10 சமீ. இலங்கையில் 1800 களில் இலங்கைத் தமிழர்களிடையே காணப்பட்ட பிரசவகால

10303 இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் வாய்மொழிக் கதைகள்.

எஸ்.முத்துமீரான். சென்னை 14: தணல் பதிப்பகம், 39/13, ஷேக் தாவூத் தெரு, இராயப்பேட்டை, 1வது பதிப்பு, 2011. (சென்னை 14: ஜெம் கிராப்பிக்ஸ்). (14), 15-127 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: