9820 இருபாலைச் சேனாதிராய முதலியார் ஆக்கிய ஆக்கங்கள் சிலவற்றின் தொகுப்பு.

இருபாலைச் சேனாதிராய முதலியார் (மூலம்), யோகேஸ்வரி சிவப்பிரகாசம் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ஜீவநதி, கலை அகம், அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, கார்த்திகை 2011.

xx, 126 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ.

19ம் நூற்றாண்டில் வாழ்ந்த இருபாலைச் சேனாதிராய முதலியார் மிகச்சிறந்த வித்துவானாகவும், அரசியல் அதிகாரம் மிக்கவராகவும் விளங்கியவர். ஆறுமுகநாவலரின் ஆசிரியரான இவரிடம் ஐரோப்பிய மிஷனரிமாரும் தமிழ்கற்றதாக குறிப்புண்டு. அவரது ஆக்கங்கள் சிலவற்றின் தொகுப்பான இந்நூலை  தொகுப்பாசிரியர் மூன்று பகுதிகளாகப் பிரித்துள்ளார். முதற்பகுதியில் நீராவியடி வீரகத்தி விநாயகர் கலிவெண்பாவும் (வித்துவான் நா.சுப்பையாபிள்ளையின் உரையுடன் கூடியது), வெளியீட்டுரை, உரைப்பாயிரம், கலிவெண்பா- உரையுடன் ஆகியவை காணப்படுகின்றன. இரண்டாவது பகுதியில் நல்லை வெண்பாவும் (வித்துவான் க.முருகேசபிள்ளையின் குறிப்புடன் கூடியது),  முகவுரை, நூலாசிரியர் வரலாறு, சிறப்புப் பாயிரம், நல்லை வெண்பா-குறிப்புரையுடன் ஆகிய அம்சங்கள் காணப்படுகின்றன. மூன்றாம் பகுதியில் நல்லை நகர்க் கந்தன் பேரிற் பாடிய திருவூஞ்சல், நல்லூர்க் கந்தர் கலிவெண்பா, கண்ணகை பேரிலூஞ்சல், நல்லைக் குறவஞ்சி ஆகியனவும் அடங்கியுள்ளன. இரண்டாம் பகுதியிலிருக்கும் நூலாசிரியர் வரலாறு சேனாதிராய முதலியார் பற்றிய பலதரப்பட்ட விடயங்களையும் தருவனவாய் அமைந்திருக்கின்றன.

ஏனைய பதிவுகள்

11395 விவிக்த பதாவலி: சம்ஸ்கிருத வகைச்சொல் விளக்கச் சொற்களஞ்சியம்.

ச. பஞ்சாட்சர சர்மா (தொகுப்பாசிரியர்). ப.சிவானந்த சர்மா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், கந்தசாமி கோவிலடி, இணுவில், சுன்னாகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2013. (சுன்னாகம்: சிறீ வித்யா கம்பியூட்டர் பிரஸ், கந்தசாமி கோவிலடி,