9822 குவர்னிகா: 41வது இலக்கியச் சந்திப்பு மலர்.

இலக்கியச் சந்திப்புக் குழு (தொகுப்பாளர்கள்). தமிழ்நாடு: கருப்பு பிரதிகள், B.55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 600005, 1வது பதிப்பு, 2013. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்).

808 பக்கம், விலை: இந்திய ரூபா 550., அளவு: 21.5×15 சமீ.

யுத்த மறுப்பையும் அமைதிக்கான வேட்கையையும் சாதிய எதிர்ப்பையும் பெண் விடுதலையையும் விளிம்புப் பால்நிலையினரின் குரலையும், வஞ்சிக்கப்பட்ட மாந்தரின் பாடுகளையும் பேசும் பெருந்தொகுப்பாக 41ஆவது இலக்கியச் சந்திப்பு மலர் வெளியிடப்பெற்றுள்ளது. இலக்கியச் சந்திப்பு, இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், இலக்கிய வாசகர் கொண்ட சிறு குழுவொன்றினால் 1988ம் ஆண்டு ஜெர்மனியில் ஹேர்ண் நகரத்தில் தொடங்கப்பட்டது. தொடர்ந்த 25 வருடங்களில் 40 சந்திப்புகளை ஐரோப்பாவிலும், கனடாவிலும் நிகழ்த்தியிருந்தது.  41ஆவது சந்திப்பை 2013 ஜுலை 20ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தியவேளை இக்கட்டுரைத் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. 12 நாடுகளிலிருந்து எழுதப்பட்ட 75இற்கும் அதிகமான ஆக்கங்கள் , கட்டுரைகள், கதைகள், நேர்காணல்கள், கவிதைகள் ஆகிய  நான்கு பிரிவுகளுக்குள் அடக்கப்பட்டு தொகுக்கப்பெற்றுள்ளன. குவர்னிகா (புரநசniஉய) – பிக்காசோவினால் வரையப்பெற்ற பிரபல ஓவியமாகும். ஸ்பானிய உள்நாட்டுப் போரின்போது, 26.4.1937இல் ஜெர்மனிய வான்படை, ஸ்பெயினின் பாஸ்க் மாவட்டத்திலுள்ள சிற்றூரான குவர்னிகாவின் மீது குண்டுவீசியது. 5000 அப்பாவி மக்கள் இருமணி நேர குண்டுவீச்சால் பாதிக்கப்பட்ட சம்பவத்தை பிக்காசோ சிம்பாலிச வகைசார்ந்த கன்வஸ் ஓவியமாகத்  (25×11 அடி நீள அகலத்தில்) தீட்டியிருந்தார். பாப்லோ பிக்காசோ ஸ்பெயினில் மெலேகா என்ற ஊரில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனைய பதிவுகள்

Wild Turkey 101 Bourbon Review

Posts Most recent FORAGING Articles Examined by @valuewhisky How much time can it test prepare insane chicken breast in the a crockpot? Believe The Heart,