9832 பர்மிய பிக்கு சொன்ன கதைகள்.

மவுங் ரின் ஒளவுங் (ஆங்கில மூலம்), சோ.பத்மநாதன் (தமிழாக்கம்).  கொழும்பு  6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xix, 236 பக்கம், சித்திரங்கள்;, விலை: ரூபா 550., அளவு: 18×12 சமீ., ISBN: 978-955-659-334-8.

Maung Htin Aung (மவுங் ரின் ஒளவுங்) ஆங்கிலத்தில்  (1966இல்) எழுதிய Burmese Monk’s Tales என்ற நூலின் தமிழாக்கம், ஓவியர் ஆசை இராசையாவின்  ஓவியங்களுடன் வெளிவந்துள்ளது. பர்மாவின் (பின்னைய மியன்மார்) வடபகுதியை 1852-1877 காலகட்டத்தில் ஆண்ட  மன்னர் மிந்தோனின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர் திங்கசார் சாயதவ் என்ற சிரேஷ்ட பௌத்த மதகுரு. நாடுமுழுக்க அவர் அடிக்கடி மேற்கொண்ட பயணங்களின்போது தனது மதப்பிரச்சாரங்களில் அவர் கூறிய நகைச்சுவைமிக்க கதைகளின் மூலம் பிரபல்யம் அடைந்தவர். திங்கசார் கூறிய இக்கதைகள் பர்மிய மக்கள் மத்தியில் வாழ்மொழிக்கதைகளாக வழக்கில் இருந்துவந்தன. பர்மியப் பிக்கு சொன்ன கதைகள் பௌத்த நீதிக்கதைகளின் பிறிதொரு கிளையாக இப்பொழுது தமிழுக்கு வந்து சேர்ந்திருக்கிறது.  சோ.பத்மநாதன் மொழிபெயர்த்துள்ள இந்நூலில் திங்கசார் சாயதவ் கூறிய 58 கதைகளும், வேறு பிக்குகள் கூறிய சில நாடோடிக்கதைகளும் இடம்பெற்றுள்ளன. ஜாதகக் கதைகளிலிருந்து வேறுபட்ட பர்மிய நாடோடிக் கதைப்பாங்கில் அமைந்தவை இவை. பௌத்த துறவிகளின் மத ஒழுக்கத்துக்குப் புறம்பான வாழ்க்கையை கேலியுடன் கிண்டல் செய்யும் பல கதைகளும், மக்களின் மூட நம்பிக்கையையும், மதகுருக்களின் பாலியல் நடத்தையையும்  எள்ளல் சுவையுடன் வெளிப்படுத்தும் கதைகளும் இத்தொகுப்பில்  உள்ளன.

ஏனைய பதிவுகள்

Bingocams gokhuis Kienspe Nederland

Inhoud Beste online casino rock climber: Plas va Absolute Games: Kienspe Games Gratis speeltegoed Legale Kienspe Sites Nederland Gokhal Gij bestaan wezenlijk om die Beste