9208 சுதுமலை அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்மை பிள்ளைத் தமிழ்.

மு.கந்தையா. மானிப்பாய்: மு.கந்தையா, சுதுமலை, 1வது பதிப்பு, ஜுலை 1987. (யாழ்ப்பாணம்: செட்டியார் பதிப்பகம், 411/1, காங்கேசன்துறை வீதி, வண்ணார்பண்ணை).

xxiv, 177 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.

பண்டிதர் மு.கந்தையா அவர்கள்  இயற்றிய பிள்ளைத்தமிழ் இது. தமிழிலக்கியத்தில் பிரபந்த வகைகளில் ஒன்று பிள்ளைத்தமிழ். இது கடவுள், குரு, வள்ளல் முதலானவரை குழந்தையாகக் கொண்டு காப்பு முதலாகப் பத்துப் பருவங்களமைத்துப் பாடப்பெறுவதாகும். 

இந்நூலில் அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்மை பிள்ளைத்தமிழ், காப்புப் பருவம், செங்கீரைப் பருவம், தாலாப் பருவம், சப்பாணிப் பருவம், முத்தப் பருவம், வராணைப் பருவம், அம்புலிப் பருவம், அம்மானைப் பருவம், நீராடற் பருவம், ஊஞ்சற் பருவம் ஆகிய பத்துப் பிரிவுகளில் பாடப்பெற்றுள்ளது. இறுதியில் உரை விளக்கக்குறிப்புகள் காணப்படுகின்றன.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 87151). 

ஏனைய பதிவுகள்

12119 – அப்பரும் சுந்தரரும் அருளிய அற்புதத் திருப்பதிகங்கள்: பதிக விளக்கத்துடன்.

சி.அப்புத்துரை (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: திருவருள் குலசிங்கம் அந்தியேட்டித்தின வெளியீடு, 27/12, பரக்கும்பா பிளேஸ், 1வது பதிப்பு, ஏப்ரல் 2004. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்). x, 174 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

14505 பரத நாட்டிய செய்முறைத் தாள விளக்கம்.

சிறீதேவி கண்ணதாசன். சுழிபுரம்: பொன்னாலை சந்திர பரத கலாலயம், பறாளாய் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2011, 1வது பதிப்பு, நவம்பர் 2007. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 672 B, காங்கேசன்துறை வீதி).