9275 அரசியல் விஞ்ஞான கோட்பாடுகள் நிறுவனங்கள்.

ச.எரிக் கென்றிசன் (நிலான்). மன்னார்: ச.எரிக் கென்றிசன், முருங்கன்பிட்டி, முருங்கன், 1வது பதிப்பு, ஜனவரி 2004. (கொழும்பு 13 : யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

vi, 126 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 22×14 சமீ.

க.பொ.த.உயர்தர மாணவர்களுக்கும், பட்டப்படிப்பு மாணவர்களுக்கும் உகந்ததாக வினா-விடைமூலம் கற்றல் என்ற உத்தியைப் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ள நூல். இதன் முதற்பகுதியில்  21 தலைப்புகளின் கீழ் அரசியல் விஞ்ஞான கோட்பாடுகள் விளக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, முன்னாள் சோவியத் குடியரசு, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, சீனா ஆகிய நாடுகளின் அரசியலமைப்புக்கள் பற்றி விளக்கப்பட்டுள்ளன. இறுதிப் பிரிவில், UNO, SAARC, கொமன்வெல்த், ஆசிய அபிவிருத்தி வங்கி, ஒபெக், அணி சேரா நாடுகளின் அமைப்பு, ஐரோப்பிய பொருளாதார சமூகம், வட அத்திலாந்திக் உடன்படிக்கை ஸ்தாபனம் (நேட்டோ) ஆகிய சர்வதேச நிறுவனங்கள் பற்றி விளக்கப்பட்டுள்ளன. கலைச்சொற்றொகுதி ஒன்றும் பின்னிணைப்பில் காணப்படுகின்றது.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 51381).

ஏனைய பதிவுகள்

No deposit Added bonus

Posts Dr Watts Up slot – Should i Cheating For the An internet Slot machine game? Conclusion: Enjoyable From Playing Cent Slot machines User experience