9282 இயற்கை மூலவளங்களும் பொருளாதார வளர்ச்சியும் (வட பிரதேசம்): ஆறாம் வகுப்புக்குரியது.

வ.கிருஷ்ணசாமி. யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234 காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1972. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234 காங்கேசன்துறை வீதி).

(3), 52 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 21×14 சமீ.

இலங்கை கல்விப் பாடத்திட்டத்தில் ஆறாம் வகுப்புக்குரிய முன்தொழில் அறிமுறைப் பாடமான  இயற்கை மூலவளங்களும் பொருளாதார வளர்ச்சியும் என்ற பாடத்தை சுற்றாடலை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் வழங்குகின்றது. இயற்கை மூலவளங்கள், எமது சுற்றாடலிலுள்ள பொருட்கள், வடபிரதேசத்தின் இயற்கை மூலவளங்கள், தரைத்தோற்றம், காலநிலை, சுண்ணாம்புக் கல், மண்வளம், நீர், நிலத்தின்கீழ் நீர், இலங்கையின் கனிப்பொருள்கள், வலு, இயற்கைத் தாவரங்கள், பனை, இலங்கையின் இயற்கைத் தாவரங்கள், விலங்குகள்-பட்சிகள், கடற் செல்வம், உப்பு, மீன், மக்கட் செல்வம் ஆகிய பத்தொன்பது தலைப்புகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 87310).

ஏனைய பதிவுகள்

17408 தமிழக ஆடல் வரலாறு.

கார்த்திகா கணேசர். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). x, (2),

10574 துறவறம்: கவிதைகள்.

மீரா றதீப். அக்கரைப்பற்று -6: இளமாணிப் பட்டப் பயிலுநர் சங்கம், 1வது பதிப்பு, ஜூன் 2012. (அக்கரைப்பற்று -2: சதா பதிப்பகம், 78/1, உடையார் வீதி). (18), 46 பக்கம், விலை: ரூபா 100.,