ஏ.எச்.ஜீ.அமீன் (மூலம்), என்.எம்.எம்.றெஸீன் (தமிழாக்கம்). கொழும்பு 12: அல்-அமீன் சட்ட மத்திய நிலையம், 34, 1/5 சென் செபஸ்தியன் மேடு, 1வது பதிப்பு, மே 2001. (அச்சக விபரம் தரப்படவில்லை).
xi, 128 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×14 சமீ., ISBN: 955-8430-01-3.
காஸி நீதிபதியின் பணிகள், விண்ணப்பங்கள், விவாகரத்து, உரிமை கோரல், ஆவணங்கள் (பதிவுகள்), பல்வேறு விண்ணப்பங்களும் மேன்முறையீடும், முஸ்லிம் விவாகப் பதிவாளர், துணை ஆவணங்கள் ஆகிய 8 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. காஸி சபையின் உறுப்பினர்கள், காஸிகளின் பெயரும் விலாசமும் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளன. நூலாசிரியர் அப்துல் ஹமீத் கவுஸூல் அமீன் ஒரு சட்டத்தரணியாவார். கொழும்பு வடக்கு காஸியாக 3 வருடகாலம் சேவை புரிந்துள்ளார். முஸ்லிம்களின் இரு மேன்முறையீட்டுத் தாபனங்களான வக்பு சபையிலும் காஸி சபையிலும் அங்கத்தவராகப் பணியாற்றியவர். திறந்த பல்கலைக்கழகத்தின் பட்டப்பின் படிப்பிற்கான பிரிவில் விரிவுரையாளராகவும், முகாமைத்துவப் பிரிவில் சிரேஷ்ட ஆலோசகராகவும் பணியாற்றுகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 30370).