9311 ஆசிரியத்துவமும் பால்நிலை அறிகையும்.

தெ.மதுசூதனன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 7: அகவிழி, 3, டொறிங்டன் அவென்யு, 1வது பதிப்பு, மார்ச் 2007. (கொழும்பு 6: டெக்னோபிரின்ட், 55 டாக்டர் ஈ.ஏ.கூரே மாவத்தை).

193 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-1674-01-4.

பாடநூல்களில் பால்நிலை ஒரு விமர்சனப் பார்வை: சமூகக் கல்விப் பாடநூல்களில் பால்நிலை எவ்வாறு கையாளப்படுகின்றது என்பதை நிறுவுதல் என்ற தலைப்பில் முதலாவது கட்டுரையையும், தமிழ்ப்பாட நூல்களில் பால்நிலை வேறுபாடு என்ற தலைப்பில் இரண்டாவது கட்டுரையையும் இந்நூல் உள்ளடக்கியுள்ளது. ஆசிரியப் பணிகளில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்: ஒரு பால்நிலைக் கண்ணோட்டம் என்ற தலைப்பில் தொடர்ந்த நான்கு கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. இன்று பெண் ஆசிரியர்கள் பால்நிலை ரீதியாக பல்வேறு அறைகூவல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் முகம்கொடுக்க வேண்டியவர்களாக உள்ளார்கள். ஆசிரியப் பணியில்  உள்ள பெண்கள் ஏற்றத்தாழ்வுகள், பாரபட்சங்கள், சுரண்டல்கள், வன்முறைகள் போன்றவற்றை எதிர்கொள்ளவேண்டியவர்களாக உள்ளார்கள். இவற்றை வெளிப்படுத்தும்  நோக்கிலே இந்த நான்கு கட்டுரைகளும் அமைந்துள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  196591). 

ஏனைய பதிவுகள்

Nightclub Roulette

Material The amount of Are the Terms Of obtaining A person Call Expenses Making A casino First deposit? Spend From the Contact Costs From the