9316 ஒடுக்கப்பட்டோர் கல்வி: மலையகக் கல்வி பற்றிய விடயஆய்வு.

தை.தனராஜ். கொழும்பு 6: இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை, இல.11,  இராஜசிங்க வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2008. (கொழும்பு 6: டெக்னோ பிரின்டர்ஸ், 55 கலாநிதி ஈ.ஏ. குரே மாவத்தை).

106 பக்கம், தகடு, விலை: ரூபா 200.00, அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-1810-06-1.

மலையக மக்களின் கல்வி பற்றிய ஆய்வு நூல். மலையக மக்களின் வரலாற்றுப் பின்னணி, மலையகத்தில ;உரிமைப் போராட்டங்களும் தொழிற்சங்கங்களின் தோற்றமும் மலையகக் கல்வியின் எதிர்காலம் போன்ற இயல்களின் ஊடாக மலையகக் கல்வியின் பன்முகப் பார்வையை முன்வைக்கின்றது. ஆரம்ப கட்டங்களில் தொழிலாளர்களே தமது தோட்ட லயன்களில் திண்ணைப் பள்ளிக்கூட சாயலில் பாடசாலைகளை அமைத்தனர். பின்னர் மிஷனரிகளும் சமய நிறுவனங்களும் சில பாடசாலைகளை ஆரம்பித்தன. ஆயினும்  மலையகக ;கல்வி மாற்றாந்தாய் மனப்பான்மையோடுதான் இன்றுவரை அணுகப்பட்டு வந்துள்ளது என்பதை ஆசிரியர் வாரலாற்றுக் குறிப்புகளினூடாக இவ்வாய்வில்  நிறுவுகிறார். பேராசான் கம்யுனிஸ்ட் கார்த்திகேயன் நினைவுப்பேருரையாக 22.06.2008இல் நிகழ்த்தப்பட்ட உரையின் நூல்வடிவம். இந்நூல் அறிமுகம், கல்வி என்றால் என்ன, கல்வியின் சமூகவியல், தொழிற்பாடுசார் நோக்கும் முரண்பாடுசார் நோக்கும், தாராண்மைவாத நோக்கில் கல்வி, ஒடுக்கப்பட்டோருக்கான கல்வி- ஒரு மாதிரிகை, சகலருக்கும் கல்விக்கான முன்னெடுப்புகள், ஜொம்ரியன் மாநாடு, உலகக் கல்வி மன்றம், மலையக மக்களின் வரலாற்றுப் பின்னணி, மலையகத்தில் உரிமைப் போராட்டங்களும் தொழிற்சங்கங்களின் தோற்றமும், மலையகக் கல்வி, மலையகக் கல்வியின் எதிர்காலம், முடிவுரை ஆகிய அத்தியாயங்களினூடக விரிந்து செல்கின்றது. நூலாசிரியர் திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விப் பீடத்தின் முதுநிலை விரிவுரையாளர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  203004). 

ஏனைய பதிவுகள்

Ghost Rider Kostenlos Spielen

Content Neue Online Slots Vs Beliebte Spielautomaten, Was Bevorzugen Sie? – Candy Cash Online -Slot Spielgeld Nachteile: Die Besten Adressen Für Geldspiele Häufig Gestellte Fragen