9318 கல்விச் சீர்மியம்.

சபா.ஜெயராசா. யாழ்ப்பாணம்: பேராசிரியர் சபா.ஜெயராசா, கல்வியியல்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2002. (யாழ்ப்பாணம்: போஸ்கோ ஆர்ட்ரோன் பிறின்டேர்ஸ், நல்லூர்).

(3), 104 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14 சமீ.

கல்விச் சீர்மியம் (Educational Counselling) தொடர்பான அனைத்துக் கூறுகளையும் ஒன்றிணைத்துத் தமிழில் வெளிவரும் ஒரு முன்னோடி நூலாக இது அமைந்துள்ளது. தனியாள் செயற்பாடுகள், சீர்மியம் என்ற எண்ணக்கரு விளக்கம், கல்விசார் ஆற்றுப்படுத்தல், கல்வியில் தரக்காப்பீடும் இடர்சிக்கிய மாணவர்களும், கல்வியில் உளநலன், தொடர்தொழில் ஆற்றுப்படுத்தல், இலங்கையும் தொடர்தொழில் ஆற்றுப்படுத்தலும், தீர்வுகளை நோக்கிய உளச்சிகிச்சை முறைகள், பிரச்சினை விடுவிக்கும் சீர்மிய நடவடிக்கை, சீர்மியச் செயல்முறை, சீர்மியச் செயல்முறையின் படிநிலைகள், சீர்மியச் செயல்முறையின்போது எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகளும் மீள்வதற்கான நுட்பங்களும், செவிமடுத்தல் நுட்பங்கள், உளக் குலைவு மேலைத்தேச உளவியல் அணுகுமுறைகளின் அபத்தங்கள், ஆளுமை நடையியலும் சீராக்கலும் ஆகிய 15 தலைப்புகளில் கல்விச் சீர்மியம் பற்றிய ஆழமான கருத்துக்கள் இந்நூலில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 131661).                                                                                                                                                                                                           

ஏனைய பதிவுகள்

TVR+ pe direct, TVR 1

Content Te uiți Ce ȘI Ca VREI Poți selecţiona și dumneavoastră conj eSIM, Intenţie ş țară: România Toma: „A singură obiectiv le-o câștigat spre toate

15813 பின்காலனித்துவ நோக்கில் ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்.

தம்பிப்பிள்ளை மேகராசா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xiv, 90 பக்கம்,