9345 ஈழத்துத் தமிழ் நாட்டுப்புறக் கதைகள்.

கிருஷ்ணபிள்ளை விசாகரூபன். யாழ்ப்பாணம்: மலர் பதிப்பகம், 57/5, மணல்தறை ஒழுங்கை, கந்தர்மடம், 1வது பதிப்பு, ஆனி 2009. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டர்ஸ் பிரைவேற் லிமிட்டெட், 424, காங்கேசன்துறை வீதி).

xxi, 199 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 22.5×14.5 சமீ., ISBN: 978-955-51110-0-3.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி கி.விசாகரூபன்  இந்நூலில் தெய்வக் கதைகள், பேய்க் கதைகள், மந்திரக் கதைகள், மனிதப்பண்புக் கதைகள், அரச கதைகள், விலங்குக் கதைகள் ஆகிய ஆறு பிரிவுகளின் கீழ்  128 ஈழத்துத்  தமிழ் நாட்டுப்புறக் கதைகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார். எமது சிறுவயதில் பாடசாலையில் பாடக்கற்பித்தல்களுக்கு இடையில் ஆசிரியர்களால் சொல்லப்பட்ட இக்கதைகள் இந்நூலை வாசிக்கும் வேளையில் மீண்டும் எமது நினைவுத்தடத்தில் வந்து, சோமாஸ்கந்த மாஸ்டரையும், திலகமணி ரீச்சரையும் நினைவூட்டுவதுடன் நாம் இழந்தவிட்ட ஒரு மரபை இன்றைய பாடசாலைகளில் மீளப்புகுத்த வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றன. பாசாலைகளில் கதை சொல்லும் மரபு என்பது மாணவர்களைச் சிறுவயதிலேயே வாசிக்கத் தூண்டுகின்றது. அதேவேளையில் மாணவர்களின் வரவுவீத அளவைக் கூட்டுகின்றது. அக்கதைகளைக் கேட்பதினூடாக அம்மாணவன் தன் கிரகித்தலின் ஆற்றலினைக் கூட்டிக்கொள்வதாகவுமே இருந்திருக்கின்றன. இந்நிலை மீளவரவேண்டும் என்பதை இந்நூலின் கதைகள் நமக்குச் சொல்லாமல் புரியவைக்கின்றன.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 205799).

ஏனைய பதிவுகள்

Tips Win From the Cosmic Luck 🪐 Slot

Articles Quali Sono I Migliori Casinò Cosmic Chance? Watchmyspin Gambling establishment Educates And you may Entertains People International Must i View The brand new Nfl