தனேஸ்வரி ரவீந்திரன். வரணி: தனேஸ்வரி ரவீந்திரன், கஜகீத் வெளியீடு, வரணி வடக்கு, 1வது பதிப்பு, மே 2003. (யாழ்ப்பாணம்: எஸ்.எஸ்.ஆர். டொட் கொம் ஓப்செட் பிரிண்டர்ஸ், 288B, பலாலி வீதி).
(6), 162 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×15 சமீ.
இந்நூலானது மனிதவள முகாமைத்துவம் பற்றிய அடிப்படையான எண்ணக்கருக்களையும் மனிதவள முகாமைத்துவ நுட்பங்களையும் விரிவாக அறிந்துகொள்ள உதவும் வகையில் எழுதப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மட்டுமன்றிஅலுவலர்களுக்கும் முகாமையாளர்களுக்கும் மனிதவள முகாமைத்துவம் பற்றிய ஒரு ஆழமான அறிவைப்பெற இந்நூல் உதவுகின்றது. மனிதவள முகாமைக்கான அறிமுகம், சமமான வேலைவாய்ப்பு சந்தர்ப்பம், வேலைப் பகுப்பாய்வு, மனிதவளத் திட்டமிடல், ஆட்சேர்த்தலும் தெரிவுசெய்தலும் ஐக்கியப்படுத்தலும், பயிற்சியளித்தலும் அபிவிருத்தியும், முகாமைத்துவ அபிவிருத்தி, ஊழியரின் செயற்திறனை மதிப்பிடுதல், தொழில் முகாமையும் தொழில் அபிவிருத்தியும், மொத்தப்பணிக் கொடுப்பனவு முகாமைத்துவம் ஆகிய 10 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 136803).
மனித வள முகாமைத்துவம்.
தனேஸ்வரி ரவீந்திரன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 2வது திருத்திய பதிப்பு 2021, 1வது பதிப்பு, மே 2003. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
x, 318 பக்கம், விலை: ரூபா 850., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-770-7.
மனிதவள முகாமைத்துவத்திற்கான அறிமுகம், சம வேலைவாய்ப்பு சந்தர்ப்பம், வேலைப் பகுப்பாய்வு, மனிதவளத் திட்டமிடல், ஆட்சேர்த்தலும் தெரிவு செய்தலும் ஐக்கியப்படுத்தலும், பயிற்சியளித்தலும் அபிவிருத்தியும், முகாமைத்துவ அபிவிருத்தி, ஊழியரின் செயற்திறனை மதிப்பிடுதல், தொழில் முகாமையும் தொழில் அபிவிருத்தியும், பணிக் கொடுப்பனவு முகாமைத்துவம் ஆகிய 10 இயல்களுடன் புதிதாக இப்பதிப்பிற்கென சேர்க்கப்பட்ட தந்திரோபாய மனிதவள முகாமைத்துவம், ஊழியரது உரிமைகளை மதித்தலும் ஒழுக்காற்று முறைமையை முகாமைசெய்தலும், தொழில் உறவுகளின் இயக்கவியல், மனக்குறை கையாளுதல் படிமுறைகள், வேலைத்தள பாதுகாப்பும் ஆரோக்கியமும், ஊழியர் நலன்களும் சேவைகளும், ஊழியர் வேலையிலிருந்து விலகுதல் தொடர்பான முகாமைத்துவம், சர்வதேச ரீதியான மனிதவள முகாமைத்துவம் ஆகிய எட்டு இயல்களையும் உள்ளடக்கியதாக 18 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.