சி.மௌனகுரு. திருநெல்வேலி: நாடக அரங்கக் கல்லூரி, 1வது பதிப்பு, மார்ச் 1987. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்).
xvi, (8), 60 பக்கம், விலை: ரூபா 80., அளவு: 18.5×12.5 சமீ.
1989இன் சிறந்த நாடகத்திற்கான தேசிய சாகித்திய மண்டலப் பரிசை வென்ற நாடகம் தப்பி வந்த தாடி ஆடு. யாழ்ப்பாணம், றக்கா வீதியில் அமைந்துள்ள, சென் ஜோன் பொஸ்கோ ஆரம்பப் பாடசாலையில் 1985இல் நூலாசிரியரின் நெறியாழ்கையில் முதலில் மேடையேற்றம் கண்டது. தப்பி வந்த தாடி ஆடு, வேடரை உச்சிய வெள்ளைப் புறாக்கள் என இரண்டு நாடகங்கள் இந்நூலில் உள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 118845).