9555 வித்தகன் விபுலானந்தன்: சிறுவர் ஆய்வு இலக்கியம்.

ச.அருளானந்தம் (இயற்பெயர்: கேணிப்பித்தன்). திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், இல. 37ஃ7, மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு, ஜுலை 2011. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

vi, 88 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-52535-0-5.

ஈழத்தின் கிழக்கிலங்கையின் காரைதீவு மண் பெற்றெடுத்த மகன் சுவாமி விபலானந்தர். இவரது கல்விப்புலமையையும் சமூகத்துக்கு ஆற்றிய பணிகளையும், அவரது ஏனைய சிறப்புகளையும் தக்க சான்றுகளுடன், புகைப்படச் சான்றுகளுடன் தெளிவுறக்கூறும் நூல் இது. சிறுவர் ஆய்வு இலக்கிய நூலாகப் படைக்கப்பட்டுள்ள இந்நூல் சிறுவர்களுடன் பெரியோருக்கும் ஏற்றவகையில்  உருவாக்கப்பட்டுள்ளது. சுவாமி விபுலானந்தரின் பல்வேறு சமூக வகிபாகங்கள் இலக்கிய நயத்துடன் இந்நூலின் வழியாகப் பதிவுபெறுகின்றது. சுவாமி விபுலாநந்தர் வாழ்ந்த சமகாலச் சூழல் ஆங்காங்கே நினைவூட்டப்படுகின்றது.  ஒல்லாந்தர் மற்றும் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் நிலவிய சமயத்தோடு இணைந்த கல்வி முறைமை, தொழில் நிலைமைகள், ஆட்சிமுறை போன்றவற்றை விளங்கிக்கொண்டாலே சுவாமியவர்களின் வாழ்வியல் பணிகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியும் என்பது ஆசிரியரின் எண்ணமாகக் கொள்ளலாம்.

ஏனைய பதிவுகள்

7 Eur ofwe 70 spins noppes!

Volume Tekenen van Winorama Vi Club-niveaus – sitelink Winorama Casino Vip-gezelschap Veiligheid plusteken verantwoord acteren Roulette Let welnu waarderen die jij gelijk jij winst enz.