அ.மு.அப்துல் கஹ்ஹார். கிண்ணியா: கிண்ணியா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், 1வது பதிப்பு, டிசம்பர் 1992. (திருக்கோணமலை: விஸ்டம் அச்சகம்).
vi, 50 பக்கம், விலை: ரூபா 50.00, அளவு: 18×14.5 சமீ.
திருக்கோணமலை மாவட்டத்தின் சின்னக் கிண்ணியாவைப் பிறப்பிமாகக் கொண்டவர் அ.மு.அப்துல் கஹ்ஹார். 1954முதல் தொடர்ந்து எழுதிவரும் இவர் வள்ளல், அண்ணல்தாசன், ஆனாக்கானா, கிண்ணியூரான், மாஞ்சோலைக் கவிராயர், கிண்ணியா ஏ.எம்.ஏ. கஹ்ஹார் எனும் புனைபெயர்களில் தன் கவிதைப் படைப்புகளை ஊடகங்களில் வெளியிட்டவர். கிண்ணியா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் இலிகிதராகப் பணியாற்றும் இவரது இஸ்லாமிய சமயக் கருத்துக்களை பிரதிபலிக்கும் இஸ்லாமிய இலக்கியம் இதுவாகும். ‘அல்குர் ஆன் கூறும் அழகிய பண்புகள் (நேரிசை வெண்பா)’ என்ற முதற் பாகத்தில் 50 பாக்களும், ‘திருநபித் திரிகடுகம் (நேரிசை வெண்பா)’ என்ற இரண்டாம் பாகத்தில்; மேலும் 50 பாடல்களுமாக மொத்தம் 100 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. மேலோட்டமாகப் பார்க்குமிடத்து மேற்படி இரு சிறு நூல்களும் ‘நற்பண்பும் நபிமொழியும்’ என்ற பொதுத்தலைப்பில் ஒரு நூலாக அச்சிடப்பட்டது போலத் தோற்றமளிக்கின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14767).