9651 அன்பு மொழி.

மனோன்மணி வரதராசா. கனடா: மனோன்மணி வரதராசா, 1வது பதிப்பு, 2011. (கனடா: கிரபிக் லாண்ட், ரொரன்டோ).

68 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ.

இந்நூலிலுள்ள கவிதைகள் அன்னை தெரெசாவின் வாழ்க்கையை சிறு காவியமாகப்  பாடுகின்றன. அன்னை திரேசா பிறப்பு, அக்னெசு வாழ்ந்த வீடு, தந்தையார் மரணம், அக்னெசுவின் துறவு, புகையிரதப் பயணம், கல்கத்தா நகரம், அக்கினெசு திரேசாவாக மாறிய கதை, ஆசிரிய சேவையில் அன்னை திரேசா, 1948 மார்கழி மாதம், இரண்டாம் உலகப் போர், ஊரடங்கு நேரம், வைத்தியசாலையின் பாராமுகம், வீதியோரம் வேதனை, தொழுநோய் மருத்துவம், சாந்தி நகர் (தொழுநோயாளர் குடியேற்றம்), தாய் இல்லம், குழந்தைக் காப்பகம், இளம்பெண்கள் காப்பகம் (இதய மன்றம்), அன்னை திரேசா இளவரசி டயானாவுடன், 1984இல் பாப்பரசர் சந்திப்பு, அமெரிக்காவில் 300 பெண்கள் முன், அன்னையிடம் தஞ்சம் அடைந்தோர், சேவை அடையாளம், அன்னை திரேசாவின் சேவை, அன்புப் பணியாளர் சபை மகிமை, அன்னை திரேசாவின் வாழ்வு நிகழ்வுகள், பொது நீதிகள், தாயன்பு, இயற்கை அன்னையின் ஆற்றாமை, ஊழ்வினை ஆகிய தலைப்புகளில் இக்காவியம் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  226478). 

ஏனைய பதிவுகள்