9675 கயமை மயக்கம்.

தி.ச.வரதராஜன் (புனைபெயர்: வரதர்). யாழ்ப்பாணம்:வரதர் வெளியீடு, 226 காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1960. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், புத்தகசாலை, 226 காங்கேசன்துறை வீதி).

xvi, 152 பக்கம், விலை: ரூபா 2.25, அளவு: 18×13 சமீ.

டாக்டர் மு.வரதராசனாரின் சிறப்புரையுடன் கூடிய சிறுகதைத் தொகுப்பு இதுவாகும். மாதுளம் பழம் (சுதந்திரன்), உள்ளுறவு (ஆனந்தன்), வேள்விப் பலி (மறுமலர்ச்சி), கயமை மயக்கம் (ஆனந்தன்), உள்ளும் புறமும் (புதுவருட மலர்), பிள்ளையார் கொடுத்தார் (ஆனந்தன்), வீரம் (தினகரன்), வெறி (யாழ். எழுத்தாளர் சங்க மலர்), கற்பு (மத்திய தீபம்), ஒரு கணம் (தினகரன்), புதுயுகப் பெண் (கலைச் செல்வி), வாத்தியார் அழுதார் (ஆனந்தன்) ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. அடைப்புக்குறிக்குள் வெளியிடப்பட்ட இதழின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. கதைகளை மட்டுமல்லாமல் கதை எழுதும் கதாசிரியரின் குடும்பத்தையும் கதையின் பாத்திரமாகக் காட்டியுள்ளமை இக்கதைத்தொகுதியின் சிறப்பாகும். அவ்வகையில் அமைந்ததாக வீரம், ஒருகணம் ஆகிய  இரு கதைகளைக் குறிப்பிடலாம். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3125).

ஏனைய பதிவுகள்

14882 கலைச்சொற்கள்: நான்காம் பகுதி: புவியியற் சொற்றொகுதி.

சொல்லாய்ந்த குழுவினர். கொழும்பு 7: அரசகரும மொழி அலுவல் பகுதி, கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 421, புல்லர்ஸ் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1956. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்). (4), 120

Starburst Xxxtreme Slot Gratis Spelen

Blogs Starburst Slot Rtp Told me Netent Spielautomatenspiele Kostenlos Spielen Delight Discover A place To experience Inside the Reading user reviews Out of Canplay Gambling