9681 கொம்புத் தேன்: குட்டிக்கதைகள் 100.

ச.வே.பஞ்சாட்சரம். கனடா: சில்வர் பிறின்ற் ஹவுஸ் பதிப்பகம், மிசிசாக, 1வது பதிப்பு, ஜனவரி 2014. (கனடா: சில்வர் பிறின்ற் ஹவுஸ் பதிப்பகம், மிசிசாக).

xx, 52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.

ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள் எழுதிய 100 குட்டிக் கதைகளின் (கடுகுக் கதைகள்) தொகுப்பு இது.  28.11.1939இல் இணுவில் கிராமத்தில் ஒரு விவசாயியின் மகனாகப் பிறந்த ஆசிரியர், வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளை ஆகிய பெற்றோரின் இரண்டாவது மகனாவார். இணுவில் நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை, உடுவில் ஆண்கள் ஆங்கிலப் பாடசாலை, திருநெல்வேலி பரமேஸ்வரா கல்லூரி (தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்), கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி, வண்ணை நாவலர் மகாவித்தியாலயம் ஆகியவற்றில் கற்றுத் தேர்ந்தவர். யாழ். இந்துக்கல்லூரி, இணுவில் இந்துக் கல்லூரி, கண்டி புசல்லாவ பரிசுத்த திருத்துவக் கல்லூரி, கிளிநொச்சி மத்திய கல்லூரி ஆகியவற்றில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி தமிழ்ப் பாடசாலை ஆசிரியர்களுக்கு சேவைக்காலத் தமிழ்ப் பாட வகுப்புகளை நடத்தியுள்ளார். 1955இல் கவிதை எழுத ஆரம்பித்த இவரது முதல் கவிதை 1957இல் அல்லி மாத சஞ்சிகையில் வெளிவந்தது. 1962இல் வெளிவந்த எழிலி என்ற நூலுக்கு 1965ம் ஆண்டு சாகித்திய மண்டலப் பரிசும் கிடைத்தது. இவரது தமிழ் இலக்கணப் பூங்கா என்ற நூல் இதுவரை நான்காம் பதிப்புவரை வெளிவந்து 5500 பிரதிகளுக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளது. 2002ம் ஆண்டு இலங்கை கலை இலக்கியப் பேரவையால்  நடத்தப்பட்ட பேரவையின் அவ்வாண்டிற்கான கவிதைக்கான பரிசு ச.வே.பஞ்சாட்சரம் கவிதைகள் தொகுதி 1 என்ற நூலுக்கு வழங்கப்பட்டது. பத்துக்கு மேற்பட்ட இலக்கியப் போட்டிகளில் பரிசுகளைப் பெற்றுள்ள இவர், கவிதைகள் மட்டுமன்றி சிறுகதை, நாவல், பாநாடகம், சிறுவர் பாடல்கள், பக்திப் பிரபந்தங்கள் என்பனவற்றையும் எழுதி வெளியிட்டுள்ளார். தேச விடுதலைப் போராட்டத்தை நியாயபூர்வமானதாகவும், அறத்தின் பாற்பட்டதாகவும் கண்டு, அதனை ஊக்கியும், வாழ்த்தியும் பாடி வருகின்றார். பிரபாகரப் பெரும் காப்பியம் என்ற பெருநூலை 47 படலங்களில் 1300 மரபுக் கவிதைகளாக எழுதி மூன்று பாகங்களாக புலிகளின் குரல் வானொலியில் பாடி ஒலிபரப்பியிருந்தார். அதைவிட 30 வரையிலான மாவீரரின் வீர காவியங்களையும்  20க்கும் மேற்பட்ட எழுச்சிப்பாடல்களும் ச.வே.ப. அவர்கள் இதுவரை பாடியுள்ளதோடு விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுப் பிரிவினரிடமிருந்து மூன்றுமுறை பரிசில்களையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

ஏனைய பதிவுகள்