பன்.பாலா. கொழும்பு 14: புரவலர் புத்தகப் பூங்கா, இல.25, அவ்வல் சாவியா வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2012. (கொழும்பு: அப்பிள் கிரியேஷன்ஸ்).
x, 70 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-0195-08-4.
பன். பாலாவின் எட்டு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு இதுவாகும். மனித வாழ்வியலை, மனித விழுமியங்களைத் தொட்டுச்செல்லும் இக்கதைத்தொகுதி புரவலர் புத்தகப் பூங்காவின் 29ஆவது நூலாக வெளிவந்துள்ளது. 1970களில் தமிழ் இலக்கிய உலகால் ஈர்க்கப்பட்டவர் பன்.பாலா. சப்ரகமுவ மாகாணத்தின் பலாங்கொடையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், ஊவா மாகாணத்தில் தியத்தலாவையை வாழ்விடமாகக் கொண்டவர். இவரது கதைகளுக்காக 2006-2007 கனகசெந்திநாதன் கதாவிருது, ஊவா மாகாணத் தமிழ் சாகித்திய விழாவில் இலக்கிய விருது என்பனவற்றைப் பெற்றுக்கொண்டவர்.