9708 முரண்பாடுகள்.

இதயராசன். கொழும்பு 6: தேசிய கலை இலக்கியப் பேரவை, இல. 571/15, காலி வீதி, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2010. (கொழும்பு 6: எஸ்.பிரின்ட்).

xvi, 108 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-8637-30-2.

இந்நூல் இதயராசனின் 15 சிறுகதைகளின் தொகுப்பு. பத்துச் சதம், ஜெயா, நம்பிக்கை, செய்வினை, முரண்பாடுகள், கனகலிங்கம், தபால், தர்மபுரம், மரங்கொத்தி, வெள்ளைச்சி, விஷகடி வைத்தியம், தியாகம், வைரவி ஆச்சி, மைதானம், விதைப்பு ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.  நல்ல மனிதருள் உறைந்துகிடக்கும்  போராட்ட உணர்வை வெளிப்படுத்துகின்ற கதை நம்பிக்கை. போரின் பயனாக அங்கவீனமான ஒரு பெண் தன் வாழ்வைச் சமூகப் பயன் மிக்கதாக அமைப்பதற்குக் காட்டும் மன உறுதியைக் கூறுகின்ற இக்கதை இக்காலத்தின் தேவை உணர்ந்து எழுதப்பட்டது. இனத்துவேஷம் படமெடுத்தாடும் ஒரு சமூகச் சூழலில் மக்களுக்கு நிதானத்தை ஊட்டும் வகையில் அமைந்துள்ள ஜெயா என்ற கதை சிங்களத்துக்கு மொழிபெயர்க்கப்படவேண்டும் என்று பேராசிரியர் சி.சிவசேகரம் இந்நூலில் முன்மொழிகின்றார். வெள்ளைச்சி, விஷகடி வைத்தியம், ஆகிய கதைகள் உச்சமான இலக்கியச் செழுமையைப் பெற்றன. முரண்பாடுகள், நம்பிக்கை, ஜெயா ஆகியன கோட்பாட்டுச் செழுமைமிக்கனவாயுள்ளன. மொத்தத்தில் இச்சிறுகதைத் தொகுப்பு வன்னிப் பிரதேசத்தின் குருதிதோய்ந்த சமவாழ்வின் குறுக்கு வெட்டுமுகத் தோற்றமாகக் காட்சியளிக்கின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 214560).

ஏனைய பதிவுகள்

Free Spins Non Deposit Premie slachtmaand 2024

Grootte Gamomat gaming slots | Schapenhoeder Leeuwslots Kloosterlinge Deposito Toeslag Codes vindt pro Nederlandssprekende Toneelspeler Schenkkan ik te zeker Bank Buitenshuis Aanmelding voor casinospellen performen?